விக்ரம் “கோப்ரா” எப்படியிருக்கு… கோடங்கி விமர்சனம்
விக்ரம் “கோப்ரா” எப்படியிருக்கு… கோடங்கி விமர்சனம்
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்க, விக்ரம், இஃர்பான் பதான், ரோஷன் மேத்யூ, கே எஸ் ரவிக்குமார்,சுரேஷ்மேனன், ரோபோ ஷங்கர், ஸ்ரீநிதி , மீனாட்சி , மிருணாளினி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் கோப்ரா.
ஹாலிவுட் படங்களில் தான் இதுபோன்ற ஓப்பனிங் சீன்ஸ் இருக்கும். அந்தளவுக்கு கோப்ராவின் ஆரம்பமே மிரட்டலாக தொடங்கி பார்வையாளர் கவனத்தை தன் பக்கமாக இழுத்துக் கொள்கிறது.
ஸ்காட்லாந்து நாட்டின் இளவரசர், இந்தியாவின் வட மாநில முதலமைச்சர் ஒருவர், ரஷ்யாவில் உள்ள ராணுவ தளபதி ஒருவர் என வரிசையாக மிக முக்கிய நபர்கள் திடீர்திடீரென கொல்லப்படுகிறார்கள்.
இதற்கு என்ன காரணம், கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் கொல்லப்படுவது ஏன்? யார் இவர்களை கொல்வது என்பதை ச...









