அழகான பெண்களின் உடலமைப்பை குறிவைக்கும் ஆண்ட்ராய்ட் மாபியாவுக்கு எதிரான படம்
ஒரு படம் சென்சார் போர்டின் விதிகளைத் தாண்டி வரும்போது சில வெட்டுக்களையும், பல மியூட்களையும் முதுகில் தாங்கிக் கொண்டுதான் வெளியாகிறது.
சென்சாரைப் பொருத்தவரையில் அவர்கள் பார்வையிலும், அரசியல் அதிகாரமிக்கவர்களைப் பாதிக்காத வகையிலும் இருந்தால் பிரச்சனையில்லை. சான்றிதழ் எளிதாகக் கைக்கு வந்துவிடும்.
கொஞ்சம் சமூகப்பிரச்சனைகள், கிளாமர் உள்ள படங்கள் திணறத்தான் செய்கின்றன. அப்படி திணறி வர முடியாமல் போன படம் எக்ஸ் சோன் என்ற பெயரில் சென்சாருக்கு வந்த இந்திப் படம்.
மேல்முறையீடு வரை சென்றும் கடைசி வரை வெளி வர முடியாமலே போய்விட்டது. ஆனால் இப்போது எக்ஸ் வீடியோஸ் என்ற படத்திற்கு ஏ சான்றிதழும் சென்சார் போர்டு பெண் உறுப்பினர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்திருப்பது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ் வீடியோஸ் படம் தமிழ், இந்தி ஆகிய மொழியில் தயாராகியுள்ளது. இயக்குநர் ஹரியின் உதவியாள...









