‘அச்சமில்லை அச்சமில்லை’ இரண்டாம் பாகம் எடுப்பேன்! – அமீர்
டீம் ஒர்க் புரொடக்ஷன்ஸ் சார்பாக இயக்குனர் அமீர் தயாரிக்க, முத்து கோபால் இயக்கத்தில், விவுரி குமார் இசையமைப்பில், அமீர், முத்து கோபால், ஹரீஷ், சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் நடிக்கும் அச்சமில்லை அச்சமில்லை படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. பொதுவாக, திரைப்பட விழாக்களில் திரையுலகத்தைச் சார்ந்தவர்கள்தான் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சமூக ஆர்வலர்களை அழைத்து விழாவை நடத்தினார்கள். டிராஃபிக் ராமசாமி, சுப.உதயகுமார், கார்ட்டூனிஸ்ட் பாலா, வளர்மதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
இதில் கார்டூனிஸ்ட் பாலா தன் உரையின் போது, “விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள இயலாத ஓர் அரசாங்கம் இங்கு நடைபெறுகிறது. உங்கள் அம்மணங்களை மறைத்துக்கொள்ள எங்கள் விமர்சனங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு படம் வரைபவனை கைது செ...









