வெள்ளிக்கிழமை, நவம்பர் 20
Shadow

திரைப்படங்கள்

ஹாட்ரிக் அப்டேட் வெளியிடும் பீஸ்ட் படக்குழு!

ஹாட்ரிக் அப்டேட் வெளியிடும் பீஸ்ட் படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஹாட்ரிக் அப்டேட் வெளியிடும் பீஸ்ட் படக்குழு! நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தில் செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பீஸ்ட் படக்குழு அடுத்தடுத்து 3 அப்டேட்டுகளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் 13-ந் தேதி நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் அவரது போஸ்டரை வெளியிட உள்ளார்களாம். அதையடுத்து ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை நாட்களான அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளிலும் பீஸ்ட் படத்தின் இரண்டு முக்கியமான அப்டேட்கள் ...
‘வலிமை’ பாணியில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட ‘டாக்டர்’ படக்குழு!

‘வலிமை’ பாணியில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட ‘டாக்டர்’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘வலிமை’ பாணியில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட ‘டாக்டர்’ படக்குழு! நெல்சன் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‘டாக்டர்’. இப்படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாகவும், வினய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, அர்ச்சனா, தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக இதில் இடம்பெறும் ‘செல்லம்மா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியதோடு மாபெரும் வரவேற்பையும் பெற்றது. அண்மையில் வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டாக்டர் பட...
சமந்தா – நாக சைதன்யா பிரிய காரணம் அந்த நடிகர் தான்…. கங்கனா ரணாவத் சொல்கிறார்!

சமந்தா – நாக சைதன்யா பிரிய காரணம் அந்த நடிகர் தான்…. கங்கனா ரணாவத் சொல்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சமந்தா - நாக சைதன்யா பிரிய காரணம் அந்த நடிகர் தான்.... கங்கனா ரணாவத் சொல்கிறார்! நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இவர்கள் விவாகரத்து பெற்றது குறித்து பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவில், நாக சைதன்யாவுக்கு விவாகரத்துக்கு வழிகாட்டியவர் பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் தான் என்று குறிப்பிட்டுள்ள கங்கனா, அந்த நடிகரை பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என்று பதிவிட்டு உள்ளார். நடிகர் அமீர்கானை தான் நடிகை கங்கனா ரணாவத் இவ்வாறு சூசகமாக சாடி உள்ளார். அமீர்கானும், நாக சைதன்யாவும் ‘லால் சிங் சட்டா’ என்கிற பாலிவுட் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத...
சுந்தர்.சி இயக்கத்தில் தனுஷ்!

சுந்தர்.சி இயக்கத்தில் தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சுந்தர்.சி இயக்கத்தில் தனுஷ்! நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இந்தி படங்களில் நடித்து வட இந்தியாவிலும் பிரபலமாகி இருக்கிறார். இதுதவிர அவ்வப்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வரும் தனுஷ், விரைவில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதுதவிர மாறன், நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள தனுஷ், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்தாண்டு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது....
ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனராக ரீ-என்ட்ரி!

ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனராக ரீ-என்ட்ரி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனராக ரீ-என்ட்ரி! ரஜினிகாந்தின் மகளும், தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா ஏற்கனவே 3, வைராஜா வை ஆகிய 2 படங்களை இயக்கி உள்ளார். 3 படத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், சுருதிஹாசன் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் பிரபலமானது. ‘வை ராஜா வை’ படத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்து இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் தனுஷ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன்பிறகு ஐஸ்வர்யா படங்கள் இயக்காமல் ஒதுங்கினார். இந்நிலையில் 6 வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ், தற்போது புதிய படம் இயக்க இருப்பதாகவும், திகில் கதையம்சம் உள்ள படமாக இது உருவாக உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கி...
திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது – கணவரை பிரிந்தார் சமந்தா!

திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது – கணவரை பிரிந்தார் சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது - கணவரை பிரிந்தார் சமந்தா! தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் அவர்கள் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து இருவரும் இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் வந்தனர். தற்போது சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், நாங்கள் இருவரும் கடந்த 10 வருடங்களாக நட்பாக பழகி வருகிறோம். இந்த நட்பு எங்கள் திருமணம் வரை சென்றது. தற்போது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்கள் முடிவு...
சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யா நடித்திருக்கும் 'ஜெய் பீம்' வெளியீட்டு தேதி அறிவிப்பு! தீபாவளிக்கு வெளியாகிறது சூர்யாவின் 'ஜெய் பீம்' ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக வெளியாகும் சூர்யாவின் 'ஜெய் பீம்' சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் பிரத்யேகமாக வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோ, இந்தியா மற்றும் 240 நாடுகளில், நவம்பர் 2ஆம் தேதி, சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' படம் பிரத்யேகமாக வெளியாகிறது என அறிவித்திருக்கிறது. இயக்குனர் த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் 'ஜெய் பீம்' திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள். மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படத்தில் பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான...
ரஜினி படத்தில் நடித்த ஷெரின்!

ரஜினி படத்தில் நடித்த ஷெரின்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரஜினி படத்தில் நடித்த ஷெரின்! செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். தற்போது இவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஷெரின் நடிப்பில் தற்போது ‘ரஜினி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி இருக்கிறார். விஜய் சத்யா இதில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். மேலும் வனிதா, மூக்குத்தி முருகன், குக்வித் கோமாளி பாலா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர். ரஜினி படத்தை ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துள்ளார்கள். தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பர்ஸ்ட்லுக் போஸ்டர், பாடல்கள், டீச...
விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்!

விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்! நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். ‘தளபதி 66’ படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நான் ஈ படத்தில் நடித்த நானி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி ...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் பகத் பாசில்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் பகத் பாசில்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் பகத் பாசில்! தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன்மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த மாரி செல்வராஜ், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வரும் பகத் பாசில், அப்படத்தை முடித்த பின் மாரி செல்வராஜ...