நான் எப்போதும் ஹீரோ தான் – இயக்குனர் பாக்யராஜ் பேச்சு!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட பாக்யராஜ், 21 வருடங்களுக்கு பிறகு நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘3.6.9’. இப்படத்தை பிஜிஎஸ் சரவணகுமார் தயார்ப்பில் இயக்குனர் சிவ மாதவ் இயக்கியுள்ளார்.
உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக, நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது இப்படம். 24 கேமராக்களில் ஒளிப்பதிவு செய்ய, 450 தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்க, 75க்கும் மேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.
இதில் படக்குழுவினருடன் பலரும் கலந்துக் கொண்டனர். இதில், இயக்குனர், நடிகர் பாக்யராஜ் பேசியதாவது, 21 வருஷம் ஆச்சு என்று சொல்லி திரும்ப திரும்ப போட்டு என்னையே சங்கடப்படுத்தி விட்டார்கள்.
படத்தில் ஸ்கீரினில் வர்றவன் தான் ஹீரோவா கதை திரைக்கதை எல்லாம் சும்மாவா, அது இருந்தால் தான் ஹீரோ.
நான் அவ்வப்போ...









