கிம்பல் தொழில் நுட்பத்தில் படமான பரியேறும் பெருமாள்
முழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த பரியேறும் பெருமாள் ஒளிப்பதிவாளர் ..
பா இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர் ,கயல் ஆனந்தி ,யோகிபாபு ,
லிஜிஸ் நடிக்கும் படம் பரியேறும் பெருமாள் .செப்டம்பர் 28 படம் வெளியாகிறது . இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள்.
படப்பிடிப்பை பற்றி படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில்..
பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம் , முதல் படம் மாலை நேரத்து மயக்கம் . நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான் எனக்கு அதிகமாக கிராமத்து வாழ்க்கைபற்றி பரிச்சயம் இல்லை எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான். ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார்தான் எனது குரு. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விசயங்கள்தான் என்னை புதிதாக இயங்கசொல்கிறது. எனக்கு சில எழுத்தாளர்கள் நண்பர்கள் இருக்கிறார்கள் வ...









