வினியோகிஸ்தர்களுக்கு சைத்தான் ஆக மாறிய அண்ணாதுரை நஷ்டமா… விஜய் ஆண்டனியின் அலட்சியமா … புலம்பும் வினியோகிஸ்தர்கள்..!
ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் 'அண்ணாதுரை நவம்பர் 30 அன்றுரிலீஸ் ஆனது.
இவர்நடிப்பில் நான் (2012) சலீம் (2014) இந்தியா பாகிஸ்தான், பிச்சைகாரன் (2015) எமன், சைத்தான் (2016) வெளியானஇப்படங்களில் பிச்சைகாரன் தமிழ் , தெலுங்கில் மிகப் பெரும் வெற்றி பெற்றதன் மூலம் தமிழ் சினிமாவில் வியாபார முக்கியத்துவம் உள்ள நாயகனாக ஆனார் விஜய் ஆண்டனி.
பிச்சைக்காரன் படத்திற்கு பின் வெளிவந்த எமன், சைத்தான் இரு படங்களும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் நஷ்டத்தை ஏற்படுத்தின. அண்ணாத்துரைபடத்தின் தமிழக உரிமையை 6.50 கோடிக்கு அலெக்சாண்டர் வாங்கினார்
முந்தைய படங்கள் பிளாப் ஆகி இருந்தாலும் அண்ணாதுரை படம் பிரமாதமாக வந்திருப்பதாக விஜய் ஆண்டனியும், அவரது மனைவி பாத்திமா இருவரும் கூறியதை அ...








