இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநர் வி.அரன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள “ஜிகிரிதோஸ்த்”
பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹசன், அம்மு அபிராமி, வீ.ஜே.ஆஷிக், பவித்ரா லஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தர்ராஜன், சிவம், மதுமிதா, ஆர்.என்.ஆர்.மனோகர், சரத், துரை சுதாகர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜிகிரிதோஸ்த்.
இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன் 2.0’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வி.அரன் இயக்கி தயாரித்துள்ள இந்தப்படத்தில் நடித்துமிருக்கிறார்.
இயக்குநரும், நடிகருமான வி.அரன் படம் குறித்துக் கூறியதாவது….
நான் ஷங்கர் சாரிடம் 2.0 படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறேன். சில குறும்படங்களையும் இயக்கி இருக்கிறேன். அந்தப் படங்கள் சைமா உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளன.
என்னுடைய குறும்படத்தைப் பார்த்துவிட்டு இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரதீப் சார் படம் பண்ணலாம் என்று அழைத்தார். அதன்படி, பிரதீப் சார், என்னுடைய நண்பர் அர்ஜுன் ஆகியோருடன் இணைந்து இ...









