LK அக்ஷய் குமாரின் அடுத்த அதிரடி ஆட்டம்… கிரைம் டிராமாவாக உருவாகும் புதிய படம்..!
ஒவ்வொரு படத்திலும், ஒவ்வொரு களத்தில் அசத்தும் LK அக்ஷய் குமாரின் அடுத்த படம் இனிதே துவங்கியது!
‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் LK அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. மாறுபட்ட கதைக்களங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கோணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் LK அக்ஷய் குமாரின் அடுத்த படைப்பாக இப்படம் உருவாகிறது. கிரைம் டிராமா ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பும் இன்று தொடங்கியுள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் LK அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்...









