அனைவரையும் கலாய்த்து இணையத்தில் கலக்கிய சிவா
மிர்ச்சி சிவா நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான படம் ‘தமிழ்ப்படம்’. சி.எஸ்.அமுதன் இயக்கியிருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகம் பரபரப்பாக உருவாகி வருகிறது. சி.எஸ்.அமுதனே இயக்கி வரும் இதிலும் ஹீரோவாக சிவாவே நடித்துள்ளார்.
சிவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். மேலும், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். முதல் பாகத்தில் நடித்த திஷா பாண்டேவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கண்ணன் இசையமைத்து வரும் இதற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் தயாரித்திருக்கிறார். சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த ...









