சீனாவில் பாகுபலி 2ஆம் பாகம் வசூல் சாதனை – 2 நாளில் ரூ.36 கோடி வசூல்
சீனாவில் பாகுபலி இரண்டாம் பாகம் வெளியாகி இரண்டு நாளில் 36 கோடி ரூபாயை வசூலை ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய திரையரங்குகள் முழுவதையும் ஆக்கிரமித்தது பாகுபலி 2 திரைப்படம். பன்மொழிகளில் வெளியான இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பிரபாஸ் மற்றும் கதாநாயகியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் பல முக்கிய கதாப்பாத்திரங்களில் ரம்யா கிருஷ்ணா, நாசர், சத்யராஜ், தமன்னா, ரானா டக்குபதி எனப் பலர் நடித்தனர். 2015ம் ஆண்டில் முதல் பாகம் வெளியான நிலையில், கடந்த ஆண்டு இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்தச் சாதனைகளை முறியடிக்க பாகுபலி 2 சீனாவில் வெளியானது. சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீசாகும் முதல் நாளிலேயே, 18 கோடியே 66 லட்சம் ரூபாய் அளவிற்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வசூலில் வரலாற்று...









