திங்கட்கிழமை, மே 13
Shadow

காலா இசை வெளியீடு – ரஜினி ரசிகர்கள் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படத்தின் ஆடியோ வருகிற 9-ந்தேதி வெளியிடப்படுகிறது.
இதுவரை ரஜினி படத்தின் ஆடியோ வெளியீடு ஏதாவது அரங்குக்குள்தான் நடைபெறும். முதல் முறையாக காலா படத்தின் ஆடியோ வெளியீட்டை சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திறந்தவெளி அரங்கில் வெளியிட உள்ளனர்.
காலா படத்தைத் தயாரித்துள்ள நடிகர் தனுஷ் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். ரஜினி தனது அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு மிகப் பெரிய அளவில் நடத்தும் விழா இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி 10 ஆயிரம் பேருக்கு “ரஜினி மக்கள் மன்றம்” அழைப்பிதழும், விழா நுழைவு அனுமதி அட்டையையும் அனுப்பி வைத்துள்ளது. இந்த 10 ஆயிரம் பேரில் 7,500 பேர் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகிறார்கள். சென்னையை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அதிகபட்சமாக 2,500 அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
காலா பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 10 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டு இருப்பது, ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த ரஜினி, முதலில் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் அனைவரையும் நியமனம் செய்த பிறகு அவர்களை ஒரே இடத்தில் திரள செய்து, கட்சி பெயர், கொடி மற்றும் கொள்கைகளை அறிவிக்க திட்டமிட்டிருந்தார்.
காலா பட ஆடியோ வெளியீட்டு விழாவை அவர் இதற்காக பயன்படுத்திக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவேதான் முக்கிய நிர்வாகிகளை 9-ந்தேதி சென்னை வர ரஜினி உத்தரவிட்டுள்ளார். எனவே 9-ந்தேதி காலா பட ஆடியோ வெளியீட்டு விழாவின்போது, ரஜினி தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
255 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன