சனிக்கிழமை, நவம்பர் 21
Shadow

திரைப்படங்கள்

 OM தனுஷ் படமா? சாய் பல்லவி படமா? கோடங்கி விமர்சனம் 2.5/5

 OM தனுஷ் படமா? சாய் பல்லவி படமா? கோடங்கி விமர்சனம் 2.5/5

HOME SLIDER, kodanki voice, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம், வீடியோ
   இது தனுஷ் படமா? சாய் பல்லவி படமா?  ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டத்தை வைத்துக்கொண்டு, ஒரு பெரிய கதையைச் சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. ஆனால் அந்தக் கதையை முழுமையாக ரசிகர்களின் மனதுக்குள் இறக்கிவிட்டாரா என்றால்… அதில்தான் கொஞ்சம் தடுமாற்றம்! ஆந்திராவின் சேஷாசலம் வனப்பகுதியைச் சுற்றி நடக்கும் செம்மரக் கடத்தல் பின்னணியில் கதை நகர்கிறது. கடத்தல் கும்பலுக்குள் ஊடுருவி அதன் செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருவதற்காக ரகசியப் பணியில் ஈடுபடுகிறார் தனுஷ். மரம் வெட்டும் தொழிலாளி என்ற அடையாளத்தில் கும்பலுக்குள் நுழைந்து, அதன் முக்கிய நபரான மம்மூட்டியின் நம்பிக்கையைப் பெறுகிறார். மறுபுறம், காவல்துறை நடவடிக்கையை வழிநடத்தும் அதிகாரியாக சாய் பல்லவி. ஒரு பக்கம் கடமை, இன்னொரு பக்கம் மனிதநேயம், நடுவில் சிக்கிக்கொள்ளும் தனுஷ்! இங்கேதான் படம் ஒரு சாதாரண போலீஸ் – த...
ஆகாயத்தில் ஒரு தாரகை கோடங்கி விமர்சனம் 4/5

ஆகாயத்தில் ஒரு தாரகை கோடங்கி விமர்சனம் 4/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    ஆகாயத்தில் ஒரு தாரகை கோடங்கி விமர்சனம் 4/5 ஒரு பெண் விண்வெளிக்குப் போக வேண்டும் என்று கனவு காண்கிறாள். ஆனால் அவளுடைய வாழ்க்கை அவளுக்காக முடிவெடுக்கிறது. திருமணம் செய்து வைக்கப்படுகிறது. குடும்பப் பொறுப்புகள் அவளுடைய கனவுகளைப் புதைக்கின்றன. அங்கேதான் அவளுடைய கணவன் ஒரு முடிவெடுக்கிறான் – அவளால் முடியாததை அவளுக்காகச் சாதித்துக் காட்டுவது! இதுதான் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஆகாயத்தில் ஒரு தாரகை திரைப்படத்தின் அடிப்படைக் கதை. இது வெறும் காதல் கதையா? கணவன் – மனைவி பாசத்தைப் பேசும் குடும்பப் படமா? இல்லை, ஒரு பெண்ணின் கனவுக்காக இன்னொரு மனிதன் நடத்தும் போராட்டமா? இந்தக் கேள்விகளுக்குள் பயணிக்கும் ஒரு உணர்ச்சிகரமான திரைப்படமாக இப்படம் அமைந்திருக்கிறது. கதை ஒரு சிறிய கிராமத்தில் தொடங்குகிறது. அங்கே வாழும் கல்பனா என்ற சிறுமிக்கு சிறுவயதிலிருந்தே வ...
‘ஜெயில் மேட்ஸ்’ படத்தில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் கடைசி பாடல் ‘வா சிவா’ வெளியீடு!

‘ஜெயில் மேட்ஸ்’ படத்தில் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் கடைசி பாடல் ‘வா சிவா’ வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, songs, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  'தேனிசைத் தென்றல்' தேவாவின் குரலில் இறுதியாக உருவான 'ஜெயில் மேட்ஸ்' படத்தின் முதல் பாடலான 'வா சிவா' வெளியீடு! இயக்குநர் K.P. ஜெகன் நடிக்கும் 'ஜெயில் மேட்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு! இயக்குநரும் நடிகருமான K. P. ஜெகன் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜெயில் மேட்ஸ்' திரைப்படத்தில், மறைந்த 'தேனிசைத் தென்றல்' தேவாவின் இனிமையான குரலில் பதிவு செய்யப்பட்ட கடைசிப் பாடலான 'வா சிவா' எனும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இயக்குநர் K.P. ஜெகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயில் மேட்ஸ்' திரைப்படத்தில் K.P. ஜெகன், விஜய் வர்மா, எம். எஸ். பாஸ்கர், சனாஷ்கா ஸ்ரீ, மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, 'உறியடி' சங்கர், சாய் அபிநயா, வீரசமர், கதிரவன் பாலு, திண்டுக்கல் அலெக்ஸ், இயக்குனர் மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார...

ஒரு கிராமம்… ஒரு கூடு… 35 நாட்கள் தியாகம்…விரைவில் திரைக்கு வருகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஒரு கிராமம்… ஒரு கூடு… 35 நாட்கள் தியாகம்! – ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனங்களுடன் இணைந்து தனது தமிழ்த் திரைப்படத் தயாரிப்புப் பட்டியலை விரிவுபடுத்தும் பனோரமா ஸ்டுடியோஸ்! ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் ( Skymoon Entertainment ) மற்றும் கல்ட் டிஜிட்டல் (Cult Digital) நிறுவனங்களுடன் இணைந்து பனோரமா ஸ்டுடியோஸ் ( Panorama Studios ) தயாரிக்கும் புதிய தமிழ்த் திரைப்படம் ‘கூடு’ ( KOODU ) – விரைவில் திரைக்கு வருகிறது! குமார் மங்கட் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையில் இயங்கி வரும் பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் சார்பில் M. கணேஷ் மற்றும் கல்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் சூனில் ஜெயின் மற்றும் ஆதித்யா ஜோஷி ஆகியோர் இணைந்து தனது புதிய தமிழ்த் திரைப்படமான ‘கூடு’ படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒரு வியப்பூட்டும் உண்மைச் சம்ப...
இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ டிரைலர் வெளியீடு

இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ டிரைலர் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரிப்பில் சிவபிரபு செல்வராஜ் இயக்கத்தில் இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'மின்னும் ஓர் இரவு' டிரைலர் வெளியீடு 'மின்னும் ஓர் இரவு' திரைப்படத்தை எவ்ரிடே சினிமா நெட்வொர்க்ஸ் நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறது இனிகோ பிரபாகர் உடன் பணியாற்றிய இனிய அனுபவங்களை பகிரும் இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் நாகர்கோவிலில் பிரபல மருத்துவரும் தொழிலதிபருமான டாக்டர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ள 'மின்னும் ஓர் இரவு' திரைப்படத்தை முன்னணி விளம்பரப் பட இயக்குநரான சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ளார். எவ்ரிடே சினிமா நெட்வொர்க்ஸ் பேனரில் குகன் சண்முகம் 'மின்னும் ஓர் இரவு' திரைப்படத்தை வரும் நவம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியிட உள்ள நிலையில், படத்தின் டிரைலர் சென்னையில் இன்று (நவம்பர் 16) வெளியிடப்பட்ட...
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியீடு! லார்க் ஸ்டுடியோஸ் (Lark Studios) மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு லார்க் ஸ்டுடியோஸ் (Lark Studios) மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் (Parallel Universe Pictures) இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அன்புடன் மகி’. ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் இப்படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது தயாரிப்பாக உருவாகும் இப்படம், அந்நிறுவனத்தின் முந்தைய வெற்றிப் படங்களான ‘கருடன்’, ‘ம...
துல்கர் சல்மானின் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ பட பத்திரிகையாளர் சந்திப்பு!

துல்கர் சல்மானின் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ பட பத்திரிகையாளர் சந்திப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  துல்கர் சல்மானின் 'ஆகாயத்தில் ஒரு தாரகை' (AOT) திரைப்படம் – சென்னையில் நடைபெற்ற தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு! துல்கர் சல்மான் நடிப்பில், இயக்குநர் பவன் சதினேனி ( Pavan Sadineni) இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'ஆகாயத்தில் ஒரு தாரகை' (AOT). கீதா ஆர்ட்ஸ் ( Geetha Arts) மற்றும் ஸ்வப்னா சினிமா (Swapna Cinema) நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை லைட்பாக்ஸ் மீடியா ( Lightbox Media) சார்பில் சந்தீப் குன்னம் (Sandeep Gunnam) மற்றும் ரம்யா குன்னம் ( Ramya Gunnam) தயாரித்துள்ளனர். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஸ்ருதி ஹாசன் மற்றும் அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள 'ஆகாயத்தில் ஒரு தாரகை' (AOT) படத்தின் விளம்பரப் பணிகள் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன....
கண்ணன் ரவி குழுமத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

கண்ணன் ரவி குழுமத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கண்ணன் ரவி குழுமத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு! கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group) சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வித்தியாசமான உருவாக்கத்துடன் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. கண்ணன் ரவி குழுமம் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருவதுடன், புதிய திறமையாளர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறது. அந்த வகையில...
வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ஷாருக்கானின் “து மில் ஜாயே”!

வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ஷாருக்கானின் “து மில் ஜாயே”!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் (Ormax Heartbeats) வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ஷாருக்கானின் “து மில் ஜாயே” (Tu Mil Jaaye)! நடிகர் ஷாருக்கான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கிங்’ (King) திரைப்படத்தின் “து மில் ஜாயே” (Tu Mil Jaaye) பாடல், ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் (Ormax Heartbeats) வெளியிட்டுள்ள வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதுடன், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் இந்தப் பாடலின் ஹுக் ஸ்டெப்பை ரசிகர்கள் பலரும் ரீல்ஸ்களாக உருவாக்கிப் பகிர்ந்து வருகின்றனர். மேலும், பல்வேறு இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்பாடல் கவனம் ஈர்த்து வருகிறது. ‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடி...
லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! சுபாஸ்கரன் தலைமையிலான லைகா புரொடக்‌ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இஞ்சி வெல்லம்' திரைப்படம் ஜனவரி 29, 2027 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மணி ரத்னம் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'இஞ்சி வெல்லம்' திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், அடுத்த வருடம் ஜனவரி 29 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் இயக்குநர் மணி ரத்னம் கூட்டணி இதற்கு முன்பு 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் மூலம் பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்தனர். ...