OM தனுஷ் படமா? சாய் பல்லவி படமா? கோடங்கி விமர்சனம் 2.5/5
இது தனுஷ் படமா? சாய் பல்லவி படமா?
ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டத்தை வைத்துக்கொண்டு, ஒரு பெரிய கதையைச் சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. ஆனால் அந்தக் கதையை முழுமையாக ரசிகர்களின் மனதுக்குள் இறக்கிவிட்டாரா என்றால்… அதில்தான் கொஞ்சம் தடுமாற்றம்!
ஆந்திராவின் சேஷாசலம் வனப்பகுதியைச் சுற்றி நடக்கும் செம்மரக் கடத்தல் பின்னணியில் கதை நகர்கிறது.
கடத்தல் கும்பலுக்குள் ஊடுருவி அதன் செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருவதற்காக ரகசியப் பணியில் ஈடுபடுகிறார் தனுஷ். மரம் வெட்டும் தொழிலாளி என்ற அடையாளத்தில் கும்பலுக்குள் நுழைந்து, அதன் முக்கிய நபரான மம்மூட்டியின் நம்பிக்கையைப் பெறுகிறார்.
மறுபுறம், காவல்துறை நடவடிக்கையை வழிநடத்தும் அதிகாரியாக சாய் பல்லவி. ஒரு பக்கம் கடமை, இன்னொரு பக்கம் மனிதநேயம், நடுவில் சிக்கிக்கொள்ளும் தனுஷ்!
இங்கேதான் படம் ஒரு சாதாரண போலீஸ் – த...








