வெள்ளிக்கிழமை, ஜூன் 5
Shadow

திரைப்படங்கள்

சர்கார் பட வசூலை முந்திய  ரஜினியின் 2.0

சர்கார் பட வசூலை முந்திய ரஜினியின் 2.0

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. சுமார் ரூ.550 கோடி பொருட்செலவில் உருவான இப்படம் வசூலில் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரிலீசான பெரும்பாலான தியேட்டர்களில் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. 2.0 படம் சென்னையில் மட்டும் ரூ. 2.64 கோடி வசூல் செய்துள்ளது. இது சர்கார், மெர்சல், விவேகம், காலா ஆகிய படங்களைவிட அதிகம். இதன்மூலம் சர்காரின் முதல் நாள் வசூல் சாதனையை 2.0 முறியடித்துள்ளது. விஜய் நடித்த சர்கார் படம் சென்னையில் முதல் நாள் ரூ. 2.37 கோடி வசூலித்தது. சென்னையில் ரிலீசான அன்றே அதிகம் வசூல் செய்த படமாக சர்கார் இருந்தது. அந்தப்படம் தீபாவளி அன்று ரிலீஸாகி அதிகம் வசூலித்தது. 2.0 பண்டிகை இல்லாத வார நாளில் வெளியாகி அந்த சாதனையை முறியடித்துவிட்டது. 2.0 படம் இந்தியில் சுமார் ரூ. 25 கோடி வரை வசூல...
விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை – சிவா

விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் இல்லை – சிவா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வந்தது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இரண்டு அஜித் இருந்ததால் இந்த தகவல் பரவியது. ஆனால் விஸ்வாசம் படத்தில் ஒரு அஜித் தான் என்று இயக்குனர் சிவா கூறி இருக்கிறார். படத்தின் கதை பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் ‘தேனி மாவட்டத்தில் கொடுவிலார்பட்டி என்கிற கிராமத்தில் நடக்கும் கதை இது. வெளியே வீரமாகவும், உள்ளுக்குள்ளே வெள்ளந்தியாகவும் வாழும் மனிதர்களின் உணர்வுபூர்வமான சம்பவங்கள்தான் `விஸ்வாசம்’. படத்தில் அஜித்துக்கு ஒரே ஒரு வேடம்தான். முரட்டு மீசையோடு அலப்பறையான தடாலடி ஆசாமி ‘தூக்குதுரை’ அஜித். முதல்பாதியில் தேனி கிராமத்துத் திருவிழாக் கொண்டாட்டத்தில் அதிரடி செய்கிறார். இடைவேளைக்குப் பிறகு நகரத்தில் தூள் கிளப்...
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் ரியோ

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் ரியோ

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சிவகார்த்திகேயன் டிவியிலிருந்து வந்து சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகராக வளர்ந்து இருக்கிறார். 12 படங்களில் மட்டுமே இதுவரை நடித்துள்ள சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அதிக வசூல் புரியும் டாப் 5 முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துவிட்டார். படத்தில் நடிப்பதுடன், எஸ்.கே.புரொடக்‌‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி கனா என்ற படத்தை தயாரித்துள்ளார். கனா படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் எஸ்.கே.புரொடக்‌‌ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இந்தப் படத்தின் மூலம் தொலைக்காட்சி புகழ் ரியோ நாயகனாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜோடியாக சிரின் கஞ்சவாலா நடிக்கிறார். இவர்களுடன் ராதா ரவி, விக்னேஷ்காந்த் உள்ளிட்டோரும் பலரும் நடிக்க யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்திற்...
நாகார்ஜூனா மகன் அகிலுடன்  ஜோடி சேர்ந்த இயக்குனர் மகள்..!

நாகார்ஜூனா மகன் அகிலுடன் ஜோடி சேர்ந்த இயக்குனர் மகள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா – அமலா தம்மபதியரின் மகன் அகில் நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று 50 கோடிக்கு மேல் வசூல்சாதனை செய்த “ ஹலோ “ படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது. தமிழிலும் நாகர்ஜூனாவே தயாரிக்கிறார். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாதவன் நடித்த யாவரும் நலம், சூர்யா நடித்த 24 ஆகிய படங்களை இயக்கிய விக்ரம்.கே.குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். ரம்யாகிருஷ்ணா பாகுபலி படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ஜெகபதிபாபு, அஜெய், சத்யகிருஷ்ணா, அனீஸ்குருவில்லா, வெண்ணிலா கிஷோர்  ஆகியோரும் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, இயக்கம்  -  விக்ரம்.K.குமார் . படத்தை உலகமுழுவதும் வெளியிடுகிறார் ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி. ...
‘மின்னல் வீரன்’ தயாரிப்பாளருடன் அதர்வா சமரசம்..!

‘மின்னல் வீரன்’ தயாரிப்பாளருடன் அதர்வா சமரசம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் படம் ‘மின்னல் வீரன்’. மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் இந்தப்படத்தில் அதர்வா கதாநாயகனாக ஒப்பந்தமாகி, படத்தின் வேலைகள் ஜரூராக நடைபெற்று வந்தன. இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன் அதர்வா தயாரித்து நடித்த ‘செம போத ஆகாத’ படம் வெளியானது. இந்தப்படம் ஒருகட்டத்தில் ரிலீஸுக்கு தயாராவதில் பொருளாதார ரீதியாக சிரமத்தை சந்தித்தபோது, இந்தப்படத்தை நல்லபடியாக வெளியிடுவதற்கு தனது எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் உதவிக்கரம் நீட்டினார் தயாரிப்பாளர் மதியழகன். ஆனால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியன்று தன் பக்கம் உள்ள சில பிரச்சனைகளை அதர்வா சரிசெய்து படத்தை மதியழகனுக்கு ஒப்படைப்பதற்குள், முதல் இரண்டு காட்சிகள் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. அதனால் அந்தப்படத்தை விநியோகஸ்தர்களுக...
26 சர்வதேச விருதுகளை வென்ற டூ லெட் திரைப்படம்

26 சர்வதேச விருதுகளை வென்ற டூ லெட் திரைப்படம்

CINI NEWS, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  65-வது தேசிய விருது பட்டியலில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூலெட்’ படம் வென்றது. இன்னும் திரைக்கு வராத இந்த படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது. நமது ஊரில் வாடகை வீடு தேடி அலைவது பெரிய வி‌ஷயம். இதில் உள்ள சிக்கல்கள், சிரமங்கள் என்ன என்பதை யதார்த்தமாக சொல்வதே ‘டூலெட்’ படத்தின் கதை. படம் குறித்து நமது குடும்பத்தில் எத்தனையோ வி‌ஷயங்கள் நடக்கின்றன. இதை மற்ற நாட்டினரும் அறிய வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதை உள்ளபடியே திரைப்படமாக்கி இருப்பதாக இயக்குநர் செழியன் கூறினார். இந்தப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் இணைந்து நடித்துள்ளனர். வரும் டிசம்பரிலோ அல்லது பொங்கலுக்கு பின்னரோ படத்தை தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக படக்க...
பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் 2.0

பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் 2.0

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் 2.0 ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் லைகா தயாரிக்கும் ரஜினியின் 2.0 படம் 29ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தென்னிந்திய மொழி படங்களில் அதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை ரஜினியின் 2.0 பெற்றுள்ளது. இதற்கு முன்பு ரஜினி நடித்த முத்து படம் சீனாவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது. அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிக துல்லியமான இசையை கேட்க 4டி டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. படமும் 3டி தொழில்நுட்பத்தில் பார்க்க முடியும். இந்தியாவில் 10 திரையரங்குளில் மட்டுமே இப்போதைக்கு இந்த வசதி இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை இரண்டு திரையரங்குளில் மட்டுமே இந்த நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல ஆயிரம் ஸ்கிரீன்களில் 2.0 ரில...
சினிமாவை வாழவைக்க நமக்குள் ஒற்றுமை அவசியம் – நடிகர் ஆரி ஆவேசம்

சினிமாவை வாழவைக்க நமக்குள் ஒற்றுமை அவசியம் – நடிகர் ஆரி ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
படத்தின் இசையமைப்பாளர் ரோஷன் ஜேக்கப் பேசுகையில், இப்படத்திற்காக முதலில் 2 பாடல்கள் தான் என்று முடிவு செய்தோம். பிறகுதான் 3 பாடல்களை சேர்த்து 5 பாடல்கள் இசையமைத்தோம். கிரிக்கெட், கபடி, மற்றும் காதல் என்று மூன்றும் சேர்ந்த கலவையாக இப்படம் இருக்கும். டூரிங் டாக்கீஸ் படத்தின் இயக்குனர் இஷாக் பேசுகையில், அபிலாஷ் எனக்கு சிறுவயது முதலே எதிரி. சிறுவயதில் நான் வீட்டிற்கு வரும் நேரத்தில் ‘மைடியர் பூதம்’ நெடுந்தொடர் ஓடிக்கொண்டிருக்கும். அத்தொடரில் ‘மூசா’ கதாபாத்திரத்தில் அபிலாஷ் நடித்திருப்பார். நான் சினிமாவிற்கு வந்தபிறகு நானும் அபிலாஷூம் ஒரே அறையில் தங்கியிருந்தோம். எனக்கு ஒரு நல்ல நண்பர். நான் இயக்கிய ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் அவரை வில்லனாக அறிமுகப்படுத்தினேன். ஆனால், ‘தோனி கபடி குழு’ படத்தில் அவர் கதாநாயனாக நடிக்கிறார். இப்படத்தை சம்பந்தபட்டவர்களைவிட நான்தான் அதிகமாக பார்த்திருக்கிறே...
மேதகு பிரபாகரனுக்கு பெருமை சேர்க்குமா சீறும்புலி!

மேதகு பிரபாகரனுக்கு பெருமை சேர்க்குமா சீறும்புலி!

HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  மேதகு பிரபாகரனுக்கு பெருமை சேர்க்குமா சீறும்புலி! #Prabhakaran #Vijay #GayathriRaghuram #Nayantara #Atlee https://youtu.be/bARAx1fdkgQ