மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் 29 மே 2024 அன்று வெளியாகிறது!
*'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் 29 மே 2024 அன்று வெளியாகிறது!*
விஜய் ஆண்டனி, சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘ரோமியோ’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி தனது அடுத்த படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை வெளியிட தயாராகி வருகிறார். 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது', 'கோலி சோடா', '10 எண்றதுக்குள்ள', 'கோலி சோடா2' போன்ற படங்களை இயக்கியவரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் 'மழை பிடிக்காத மனிதன்' (MPM) படத்தை அதிக பட்ஜெட்டில் இயக்கியுள்ளார்.
விஜய் ஆண்டனி, ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், பிரபல கன்னட ஹீரோ ‘டாலி’ தனஞ்ஜெயா, மேகா ஆகாஷ், முரளி ஷர்மா, ப்ருத்வி ஆம்பர், சரண்யா பொன்வண்ணன், ‘தலைவாசல்’ விஜய், ஏ.எல். அழகப்பன், 'திருமலை' படப்புகழ் இயக்குநர் ரமணா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘
...









