துணிச்சலான காவல் ஆய்வாளராக சாய் தன்ஷிகா நடிக்கும் ‘யோகிடா’
*துணிச்சலான காவல் ஆய்வாளராக சாய் தன்ஷிகா நடிக்கும் 'யோகிடா' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!*
பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த, சமீபத்தில் வெளியான 'ஐந்தாம் வேதம்' வெப் தொடரிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய 'சாய் தன்ஷிகா' முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'யோகிடா'. இத்திரைப்படத்தில் சயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் கௌதம் கிருஷ்ணா. மலையாளத்தில் 'லூசிஃபர்' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் தமிழில் 'சாது மிரண்டா' போன்ற படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்ற தீபக் தேவ் படத்திற்கு இசையமைத்துள்ளார். தவசி,நரசிம்மா போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.KA.பூபதி ஒளிப்பதிவை மேற்கொள்ள, G சசிக்குமார் ப...









