
மாமன் விமர்சனம்
அளவுக்கு அதிகமானால் அமிர்தம் கூட நஞ்சாக மாறும் என்ற பழமொழி எல்லாருக்கும் தெரியும் இத எதுக்கு இப்ப சொல்லனும் யோசிக்காம விமர்சனத்துக்குள்ள போகலாம்…
கதைப்படி….
திருச்சி மாவட்டத்தில் இனிப்பு பலகார நிறுவனத்தை நடத்தி வருகிறார் சூரி. தந்தையை இழந்த அவருக்கு, தன் அக்கா சுவாசிகாதான் உயிர்.
சுவாசிகாவிற்குத் திருமணம் ஆகி, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், குழந்தை இல்லாததால் குடும்பத்தாரும் சுற்றத்தாரும் அவரது மனதைக் காயப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்நிலையில், சுவாசிகா ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். அதீத பாசத்தைத் தன் அக்கா மகன் பிரகீத் சிவன்(லட்டு) மீது பொழிந்து வளர்க்கிறார் தாய்மாமன் சூரி.
இதனிடையே சூரி தன் காதலி ஐஸ்வர்யா லெட்சுமியை மணமுடிக்கிறார். திருமணத்திற்குப் பின் சிறுவன் பிரகீத் சிவனால், சூரி – ஐஸ்வர்யா லெட்சுமி இடையே பிரச்னை வருகிறது.
அப்பிரச்னை விரிவடைந்து குடும்பச் சண்டையாக மாறுகிறது. அதற்குப் பிறகு உறவுகளுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டம்தான் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருக்கும் ‘மாமன்’ படத்தின் கதை.
லட்டு எப்பொழுது பார்த்தாலும் இன்பா உடனேயே இருப்பதால் புதிதாக திருமணமாகிய ஜோடிக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. மகன் தன்னை விட மாமன் மீது பாசமாக இருப்பதை பார்த்து கிரிஜாவின் கணவர் வேதனைப்படுகிறார்.
லட்டு தன் மாமன் மீதான பாசத்தால் செய்யும் விஷயங்களை பார்க்கும்போது அது குழந்தை செய்யும் காரியம் மாதிரி தெரியவில்லை. ஒரு கட்டத்தில் கடும் எரிச்சலை வரவைக்கிறார் லட்டு.
பாசக்கார மாமனாக அழகாக நடித்திருக்கிறார் சூரி. கோட் சூட் பேண்ட் போடுவதை விட யதார்த்தமான கிராமத்து வாலிபனாக வேட்டி சட்டையில் சூரி தனியாக தெரிவார். கோட் சூட் கதையெல்லாம் தவிர்த்துவிட்டு யதார்த்த கதைகளை தேர்ந்தெடுப்பது நல்லது.
கணவருடன் நேரம் செலவிட போராடும் மனைவியாக வழக்கம் போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
மாமன் படத்தில் தாய்மாமன் சென்டிமென்டடை ஓவர் தூக்கலாக வைத்ததால் சுவாரஸ்யமாக அமைய வேண்டிய கதைக்கு அதுவே மைனஸாகிவிட்டது.
திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் பிரசாந்த் பாண்டியராஜ், குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் சிறு சிறு பிரச்சனைகளை சுவாரஸ்யமாக சொல்லியிருந்தாலும், திருமண நிகழ்ச்சி, காது குத்து, சீமந்தம் என்று படம் முழுவதும் குடும்ப நிகழ்ச்சிகள் அதிகம் இருப்பதால், ஏதோ சீரியல் பார்ப்பது போன்ற உணர்வுதான் ஏற்ப்படுகிறது.
ஒட்டு மொத்தமாக மாமன் உறவுகளின் ஓவர் டோஸ்!
