
டிடி நெக்ஸ்ட் லெவல்… விமர்சனம் 2.5/5
தமிழ் சினிமா வரலாற்றை திருப்பி பாத்தா சினிமாவை வைச்சி… இல்ல சினிமாவ கிண்டல் அடிச்சி… சினிமா தொழிலாளர் கஷ்ட்த்த சொல்லி படம் எடுத்து எந்த படமும் ஓடுனதா நினைவே இல்ல…
அதோட சோஷியல் மீடியா, யூடியூப், இன்ஸ்டா, எக்ஸ் இப்படின்னு ஏகப்பட்ட்துல ஒரு படம் ரிலீஸ் ஆனதும் விமர்சன்ங்கள் வந்து மக்கள்கிட்ட போய் சேருது….
நல்ல கதையோட வரும் படங்கள் எப்படி விமர்சனம் வந்தாலும் மக்களால் கொண்டாடப்படும். இது புரியாத சினிமாகார்ர்கள் ஏதோ விமர்சனம் பன்றதாலயே படங்கள் ஓடாம போகுதுன்னு விமர்சகர்கள் மேல கோப்ப்படுறாங்க…
சந்தானம் பட்த்து விமர்சனம் படிக்க வந்தா என்னமோ வேற போகுதேன்னு நினைக்க வேண்டாம்….
அந்த படத்தோட கதையே சினிமாவை விமர்சனம் பன்ற விமர்சகர்களை கொடூரமா கொல்றதுதான்….
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் சினிமா விமர்சகராக நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம் தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. அந்த படத்தில் சந்தானத்தின் கதாபாத்திரத்தை சொல்லும் வகையில் வைக்கப்பட்ட கோவிந்தா கோவிந்தா பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கோவிந்தா கோவிந்தா பாடலை படத்தில் இருந்து நீக்கிவிட்டு ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
திரைப்படம் பார்க்கச் செல்கிறவர்கள் அந்தத் திரைப்படத்தின் கதாபாத்திரங்களாகவே மாறிப்போகிறார்கள்.அதனால் அவர்களுக்குப் பல சிக்கல்கள்.அவற்றிலிருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்கிற கேள்விக்கான விடைதான் டிடி நெக்ஸ்ட் லெவல்.
வலையொளியில் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் சந்தானமும் அவரது குடுமபமும் திரைப்படத்துக்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.அவர்கள் ஏன் சிக்கினார்கள்? கடைசியில் என்னவானது? என்பதை சிரிப்பும் குழ்ப்பமுமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
தோற்றம் மற்றும் நடை உடை பாவனைகளில் மாற்றம் காட்ட முயன்றிருக்கிறார் சந்தானம்.அவருடைய வசன உச்சரிப்பு முறை அவருக்கு இந்தப்படத்திலும் பலமாக அமைந்திருக்கிறது.குறிப்பாக ப்ரோ என்று அவர் அழைப்பதைச் சொல்லலாம்.
நாயகியாக நடித்திருக்கும் கீதிகா திவாரிக்குக் காதல் காட்சிகள் மட்டுமின்றி பேயாக வந்து மிரட்டும் காட்சிகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.அழகான பேய்.
நான் கடவுள் ராஜேந்திரன்,மாறன்,ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள்.அவர்களோடு செல்வராகவன்,கெளதம்மேனன்,நிழல்கள் ரவி ஆகியோரும் அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.சந்தானத்துக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் கஸ்தூரி. அவரும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் அளவாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் பிசகினாலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிடக் கூடிய திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிற பிரேம் ஆனந்த். திரைப்பட விமர்சகர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அதனால் இந்தத் திரைக் கதையை எழுதியிருப்பார் போலும்.,
கடைசியில் ஒரு படம் நல்ல படமாக இருந்தால் யார் எப்படி விமர்சனம் செய்தாலும் நன்றாக ஓடும் என்கிற கருத்தைச் சொல்லி தப்பி இருக்கிறார்கள்.
மொத்த்த்தில் சந்தானத்திற்கு இந்த கதை தேவையில்லாத ஆணிதான்… ஆனாலும் பிடுங்கி விட்டார் அடுத்த பார்ட்டில் என்ன ஆகிறது என்பதை பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சிரிப்பு மருந்துக்கு சில இடங்களிலும், எரிச்சல் ஓவர் டோசாக பல இடங்களிலும் கலந்து இருப்பதால் நெக்ஸ்ட் லெவல் தாண்டுவது கஷ்டம்!
கோடங்கி 2.5/5.
