ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் சிலம்பரசன் டிஆர் பாடிய இரண்டாவது சிங்கிள் ‘தில்லுருபா ஆஜா’ வெளியாகியுள்ளது!
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இருந்து சிலம்பரசன் டிஆர் பாடிய இரண்டாவது சிங்கிள் ‘தில்லுருபா ஆஜா’ வெளியாகியுள்ளது!
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் சிங்கிளான 'பீர் சாங்' தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகர்கள் மற்றும் சர்வதேச ரசிகர்களின் மனதையும் கவர்ந்தது.
இந்த பாடல் சமூக ஊடக தளங்களில் மிகவும் கொண்டாடப்பட்ட ஒன்று. இப்போது, 'டீசல்' படக்குழு அடுத்தப் பாடலான 'தில்லுருபா ஆஜா' மூலம் ரசிகர்களை மீண்டும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சிலம்பரசன் டிஆர் தனது சிக்னேச்சர் ஸ்டைலில் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் எனர்ஜிடிக் இசையமைப்பில் பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு ஹரிஷ் கல்யாணின் ஹூக் ஸ்டெப்பும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ஸ்வேதா மோகனின் ஈர்க்கும் குரல...









