குலுமணாலியில் கடும் மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஷூட்டிங் கேன்சல் ஆன கார்த்தியின் தேவ் படம்!
குலு மணாலியில் ஏற்பட்ட கன மழை , பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நின்றது கார்த்தியின் “ தேவ் “ பட படப்பிடிப்பு !
கார்த்தியின் தேவ் திரைப்படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெறுவதாக இருந்தது. கன மழை , பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் தேவ் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள்.
இதை பற்றி நடிகர் கார்த்தி கூறும் போது , தேவ் படத்தின் படப்பிடிப்பை குலு மணாலியில் அழகிய மழை மற்றும் பனிச்சாரலுக்கு நடுவே படம்பிடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் திடீரென்று நேற்று நிலைமை மிகவும் மோசமானது. வெள்ளம் மற்றும் நில சரிவு ஏற்பட்டு. கார் , பஸ் மற்றும் பல பொருட்களை அடித்து சென்றது. நிலச்சரிவினால் பாறைகள் உருண்டு வந்ததை நானே கண்டேன். வேகமாக வந்த வெள்ளம் சின்ன சின்ன பாறைகளை அடித்து வந்தது....









