காற்றின் மொழி விமர்சனம்
கிரிக்கெட் மேட்ச்ல செகண்ட் இன்னிங்ஸ்ல முதல் ஓவர்ல முதல் பால் தொடங்கி 6 பால்லயும் சிக்ஸ்சர் அடிச்சா எப்படியிருக்கும்... அதேநேரம் அதுல சில பால் நோ பாலா மாறி அதுக்கும் சேர்த்து எக்ஸ்ட்ரா பால் கிடைச்சி அதுலயும் சிக்ஸ்சர் அடிச்சா எப்படியிருக்குமோ அப்படியிருக்குது ஜோதிகாவின் செகண்ட் இன்னிங்ஸ்...
அதுலயும் குறிப்பா இந்த படத்துல ஜோ செம...
ஒரு பையனுக்கு அம்மா... சராசரி மிடில் கிளாஸ் புருஷனுக்கு அன்பான பொண்டாட்டி... அப்படின்னு அடுப்பாங்கரையிலயே தன் உலகத்தை முடிச்சிக்கிற சாதாரண குடும்பஸ்திரி... இஸ்திரி போட்ட காட்டன் புடவைய கட்டிகிட்டு மிடுக்கா வேலைக்கு போன என்ன சந்தோஷம் இருக்குமோ அதை அப்படியே ஸ்கிரீன்ல காட்டுகிறார்...
சமையல்கட்டுல இருக்குறவங்ககிட்டயும் திறமை இருக்கும்... அதுக்கு படிப்பு முக்கியம் இல்ல... அனுபவம்தான் முக்கியம்னு சொல்ற கதைதான் காற்றின்மொ...
தமிழ் திரையுலகில் புதிய படங்கள் வெளியாகும் போது திருட்டுதனமாக வீடியோ எடுத்து சி.டி தயார் செய்து பைரசி மாபியாக்கள் கல்லா கட்டுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இச்செயலுக்கு சில திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்து உடந்தையாக இருப்பதாக தயாரிப்பாளர்களால் குற்றம்கூறப்பட்டது
தமிழகத்தில்இக்குற்றசாட்டுக்கு உள்ளான பத்து திரையரங்குகளுக்கு புதிய படங்களை திரையிட வழங்க கூடாது என்று மனுஷனா நீ, குப்பைக்கதை படங்களின் தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்படதயாரிப்பாளர்கள் சங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
சங்க தலைவர் விஷால் நடித்த சண்டக்கோழி - 2 படத்தை குற்றசாட்டுக்குள்ளான தியேட்டர்களுக்கு வழங்க மாட்டேன் என்று விஷால் அதிரடியாக அறிவித்தார்.
உடனடியாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் விஷால் முடிவை கைவிடவில்லை என்றால் சண்டக்கோழி - 2 படத்தை தமிழகம் முழுவதும் திரையிட மாட்டோம் என அற...
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `பேட்ட'. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், ரஜினியும் பொங்கல் ரேசில் இணைந்துள்ளார்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி விடுதி காப்பாளர் தாதா வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மதுரையை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் அதிர...
ஆர்ஜே பாலாஜி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘எல்.கே.ஜி’. இயக்குனர் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். பிரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ளார். சமீபகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட இருப்பதாக அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆர்ஜே பாலாஜி. அந்த போஸ்டரில் அவரைச் சுற்றி இலவச ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், பேன், டிவி மற்றும் இலவச அரிசி ஆகியவை இருக்கிறது. அவை அனைத்திலுமே ஆர்.ஜே.பாலாஜியின் ஸ்டிக்கர் இடம்பெற்றிருக்கிறது. மேலும் அந்த போஸ்டரில் இலவச வேட்டி சேலையுடன் பொங்கலுக்கு வர்றோம் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில் அரசு கொடுத்த இலவசங்களை விமர்சித்திருப்பதாக கூறி தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந...
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படத்தின் பூஜை இன்று போடப்பட்டது
2-வது சுற்றில் தான் நடிக்கும் படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறார் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த '36 வயதினிலே' படம் வெற்றி பெற்றத்தைத் தொடர்ந்து 'மகளிர் மட்டும்' படமும் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.
தனக்கு முக்கியத்துவம் தரும் கதை மட்டும் தான் வேண்டும் என்றில்லாமல், நிஜ வாழ்க்கையோடு ஒன்றி போகும் கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் கவனமாக இருக்கிறார். இதன் மூலம் முன்பை விட அதிக ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார். அதற்கு சான்றாக இந்த வாரம் வெளியாகிறது அவர் நடித்த 'காற்றின் மொழி'. இப்படம் வெளியாவதற்கு முன்பே ஜோதிகாவைப் பற்றியும், படத்தைப் பற்றியும் மிகுந்த எதிர்பார்ப்பை (குறிப்பாக பெண்களிடம்) ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், ஜோதிகாவை ...
ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K E ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மகாமுனி’.
இதில் நடிகர் ஆர்யா, நடிகை மஹிமா நம்பியார், இந்துஜா, ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாந்தகுமார். இவர் ஏற்கனவே மௌனகுரு என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர்.
இந்த படத்தின் ஒளிப்பதிவை அருண் பத்மநாபன் கவனிக்க, எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற VJ சாபு ஜோசப் படத்தை தொகுக்க, ரெம்போன் பால்ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். சண்டை பயிற்சியை ஆக்சன் பிரகாஷ் மேற்கொள்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,“க்ரைம் திரில்லர் ஜேனரில் ‘மகாமுனி ’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பா...
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பின் வெளியான டிரைலர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று உலகளவில் டிரெண்டானது.
தற்போது இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதை படக்குழுவினர் வெளியிட்டு நவம்பர் 29ம் தேதி ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளனர்....
பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இப்படத்தில் கதிர், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலமாக இப்படத்தை தயாரித்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரஜினி, கமல் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும், மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இப்படத்தை பார்த்து பாராட்டினார்கள்.
தற்போது இப்படத்தை தனுஷ் பார்த்து இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். மேலும் தனது அடுத்தப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார் என்றும் கூறியுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்...
‘குற்றம்-23’ மற்றும் ‘தடம்’ படங்களை தயாரித்த இந்தர்குமாரின் ரெதான் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சசிகுமாரை வைத்து படம் இயக்குகிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்.
1990-1994 காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் நாயகியாக சசிகுமார், மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் பெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமானுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.
இன்று நவம்பர் 12-ம் தேதி காரைக்குடியில் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பை நடிகர், இயக்குனர் சமுத்திரகனி கிளாப் அடித்து துவக...