திரைப்படங்கள்
நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’
நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’ நாகர்கோயிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது
ஜி. ஆர். மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் ‘நர்மதா ’. நந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த், எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தாய்-மகன் பாசத்தைப்பற்றி பேசும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நாகர்கோயிலில் பூஜையுடன் தொடங்கியது. சதீஸ் பி. சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, தேசிய விருதுப் பெற்ற எடிட்டர் ராஜா முகமது படத்தை தொகுக்கிறார். கலை இயக்கத்தை ஜெய் காந்த் கவனிக்க, ஓம் பிரகாஷ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். திரைக்கதை எழுதி தயாரிப்பதுடன் இயக்குநராக அறிமுமாகிறார் கீதா ராஜ்புத்.
படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ எமோஷனல் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் டிராமா ஜேனரில் உருவாகும் திரைப்படம் இது. தாய்...
பட வெளியீட்டுக்கு முன்பே ஆன்லைனுக்கு விற்கப்பட்ட “கடைக்குட்டி சிங்கம்”.. !
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் “கடைக்குட்டி சிங்கம்”. விவசாயியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார் கார்த்தி, அதைப் பெருமையாகச் சொல்லும் விதத்தில் தன்னுடைய புல்லட்டின் முன்னால் ‘விவசாயி’ என எழுதி வைத்துள்ளார்.
‘வனமகன்’ சயீஷா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரியா பவானிசங்கர் கார்த்தியின் மாமா பெண்ணாக நடித்துள்ளார்.
படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் ஆன்லைன் ஒளிபரப்பு உரிமை, அமேஸான் பிரைம் வீடியோவுக்கு விற்கப்பட்டுள்ளது.
படம் ரிலீஸான பிறகு சில மாதங்கள் கழித்து அமேஸான் பிரைம் வீடியோவில் இந்தப் படத்தைப் பார்க்கலாம். படம் ரிலீஸுக்கு முன்பே அமேஸானுக்கு விற்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக...
மோகன்லாலை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் முக்கிய பிரபலம்
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார்.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன் லால் கடைசியாக தமிழில் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மேலும் ஒரு முக்கிய பிரபலம் இப்படத்தில் இணைந்திருக்கிறார். பிரபல தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரி...
டி.ராஜேந்தர் புகாருக்கு ஆதாரம் எங்கே? – விஷால்
என் மீது எதிரணியினர் சுமத்தியுள்ள குற்றசாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் விஷால்.
நேற்று பாரதிராஜா தலைமையில் டி.ராஜேந்தர், கே.ராஜன், ராதாகிருஷ்ணன், ஜே.கே.ரித்திஷ், விடியல் ராஜு, கலைப்புலி சேகரன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலர் கூடி பேசினார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘தயாரிப்பாளர் சங்கத்தில் வைப்பு நிதியாக இருந்த 7 கோடி ரூபாய் என்ன ஆனது என்று கணக்கு காட்டவில்லை’ என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள விஷால், தயாரிப்பாளர் சங்க பணத்தை யாரும் கையாடல் செய்யவில்லை. எல்லாக் கணக்குகளும் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பைரசி இணையதளங்களை வேரோடு அழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஆதாரம் இருந்தால் நிரூபிக்கலாம். வார்த்தைகளை விட செயல் மூலம் பேசுவதே ச...
விஜய் ஆண்டனி நன்றி மறவாத மனிதர் – ஆர்.கே.சுரேஷ்
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் 'காளி'. மே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, ‘நான் ஒரு வினியோகஸ்தராக, தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். நான் பார்த்த வரையில் சமீப காலங்களில் தர்மதுரை படமும், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படமும் லாபத்தில் ஓவர் ப்ளோ கொடுத்த படங்கள். நன்றி மறந்து பலரும் சுற்றி வருகிற காலத்தில் நன்றி மறவாத ஒரு மனிதர் விஜய் ஆண்டனி. அவரின் மிகப்பெரிய பலமாக பாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா ஜான்சன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள்.
கிருத்திகாவை பார்த்து பிரமித்தேன். கதையில் என்ன வேணுமோ அதை மட்டுமே எடுத்தார் கிருத்திகா. படத்தில் நன்றாக நடிக்கக் கூடியவர்களாக தே...
4 ஹீரோயின்களோடு விஜய் ஆண்டனியின் “காளி”
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் 'காளி'. மே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பத்திரிகையாளர்களுக்கு படத்தின் 20 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர் படக்குழுவினர்.
விஜய் ஆண்டனியுடன் 4 படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். ரொம்பவே பாஸிடிவான மனிதர். எடுத்த காரியத்தில் நம்பிக்கை வைத்து வெற்றி பெறுபவர், அதை நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ரொம்ப ஸ்ட்ராங்கான டீம் இந்த படத்தில் அமைந்தது பெரிய ப்ளஸ் என்றார் கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ்.
ஆண்கள் மட்டுமே அளுமை செய்யும் திரையுலகில், பெண்கள் இணைந்து ஆளுமையோடு உருவாக்கி இருக்கு...
சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா
சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா !
இயக்குநர் ஹர்ஷவர்தனா இந்த படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.வேத் சங்கர் சுகவனம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ’7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ – டிவைன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சூர்யன் FM இல் (SURYAN FM ) நடைபெற்றது.
ஜூன் மாதம் இத்திரைப்படம் வெளிவர இருக்கிறது....
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் இணைகிறார் மோகன்லால்
சூர்யாவுடன் இணைந்து கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ளதாக கே.வி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தற்போது சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்கிற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குநர் கே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைய உள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து மோகன்லால் நடிக்கவுள்ளதாக கே.வி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கே.வி.ஆனந்த் இயக்க உள்ள படத்தில் முதலில் சூர்யாவுடன் இணைந்து அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக வதந்திகள் பரவியது. இந்நிலையில் தற்போது மோகன்லால் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மோகன்லால் இந்த வார தொடக்கத்தில் இயக்குனரை சந்தித்ததாகவும், அதில் ஒரு பகுதியாக நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யா - கே.வி. ஆனந்த் ஆகிய இருவரும் மீண்டும் இணைகிறார்கள். இந்த படத்தின் மூலம் சூர்யா மற்றும் மோகன்லால் ரச...
‘காலா’ படத்தில் நீட் தேர்வுக்கு பலியான அனிதா..!
அதிக மதிப்பெண் பெற்றும்கூட நீட் தேர்வினால் மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாமல் போராடி உயிர்விட்ட அனிதாவின் வாழ்க்கை ஏற்கனவே சினிமா படமாக தயாராகி வருகிறது. அனிதா கதாபாத்திரத்தில் ஜுலி நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்திலும் அனிதா காட்சி இடம்பெறுகிறது. இந்த படத்தில் வரும் தெருவிளக்கு என்ற பாடலில் இந்த காட்சி வருகிறது. தெருவிளக்கு வெளிச்சத்துல, நாங்க முன்னேறுவோம் என்று தொடங்கும் வரிகளுக்கு பின்னணியில் அனிதா படம் காட்டப்படுகிறது. மும்பை தாராவி பகுதியில் அனிதாவின் சுவரொட்டியை ஒட்டி வைத்து ‘டாக்டர் அனிதா, தமிழர்கள், நீட் தேர்வுக்கு எதிரானவர்கள்’ என்று வாசகத்தை அதில் குறிப்பிட்டு உள்ளனர். மும்பை விழித்தெழு இயக்கம் என்றும் அந்த சுவரொட்டியின் கீழ் எழுதி உள்ளனர்.
நெல்லையில் இருந்து சென்று தாராவி பகுதியில் தாதாவாக மாறி அங்குள்ள தமிழ் மக்களுக்காக போராடுபவர் பற்றிய படமாக க...

