சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

திரைப்படங்கள்

தீவிர பயிற்சியில் அனுஷ்கா சர்மா.. வியக்கும் ரசிகர்கள்!

தீவிர பயிற்சியில் அனுஷ்கா சர்மா.. வியக்கும் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜுலன் கோஸ்வாமி. இவர் இந்திய அணியை 2008-ஆம் ஆண்டிலிருந்து 2011-ஆம் ஆண்டுவரை வழி நடத்தினார். இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய இவருக்கு விளையாட்டில் வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்திற்கு தயாராகும் விதமாக அனுஷ்கா சர்மா மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறார். தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பந்துவீச்சு பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தை அனுஷ்கா சர்மா இன்று பகிர்ந்துள்ளார்....
வலிமையுடன் களம் இறங்கிய ”பவுடர்” போலீசின் பட்டாக்கத்தி டீசர் ரவுசு! 

வலிமையுடன் களம் இறங்கிய ”பவுடர்” போலீசின் பட்டாக்கத்தி டீசர் ரவுசு! 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வலிமையுடன் களம் இறங்கிய ”பவுடர்” போலீசின் பட்டாக்கத்தி டீசர் ரவுசு!   தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளுக்கும், புது முகங்களுக்கும் எப்போதும் தனி வரவேற்பு இருக்கும். தாதா87 படம் மூலமாக தாத்தாவாக இருக்கும் சாருஹாசனை தாதாவாக  காட்டி தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்துக் கொண்டவர் இயக்குனர் விஜய்ஸ்ரீஜி. ஏற்கனவே தென்னிந்திய சினிமா உலகில் பத்திரிகை தொடர்பாளராக பணியாற்றிய படியே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நிகில்முருகன். இந்த இருவரும் “பவுடர்” படத்தின் மூலமாக இணைந்திருக்கிறார்கள். விஜய்ஸ்ரீஜி இயக்கத்தில் ராகவன் என்ற போலீஸ் அதிகாரியாக நிகில்முருகன் நடித்து வருகிறார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அஜீத்தின் அலிமை படம் நேற்று வெளியான சூழலில், நிகிலின் பவுடர் படக் காட்சி ஒன்று டீசராக வெளியானது. அந்த காட்சியில் ரவுடிகள் பட்டாக்கத்தி ம...
ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்த்த வலிமை படக்குழுவினர்!

ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்த்த வலிமை படக்குழுவினர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது. வலிமை ரிலீசையொட்டி ரசிகர்கள் தியேட்டரில் பட்டாசு வெடித்து, நடனம் ஆடி திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள். மேலும் அஜித்துக்கு கட்-அவுட் வைத்து மாலை போட்டும் அலங்கரித்து வைத்தார்கள். இந்நிலையில், வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், நாயகி ஹுமா குரேஷி, வில்லன் கார்த்திகேயா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்திருக்கிறார்கள். இவர்கள் தியேட்டரில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது....
சமந்தா நடித்துவரும் ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சமந்தா நடித்துவரும் ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சமந்தா நடித்துவரும் ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகை சமந்தா நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘யசோதா’, ‘சகுந்தலம்’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. இதில், ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ‘ருத்ரமாதேவி’ படத்தை இயக்கிய தெலுங்கின் முன்னணி இயக்குநர் குணசேகர், மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு, இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்க, சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார். இப்படத்தில், மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். நீலிமா குணா, மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க பிரபல தயாரிப்பா...
சிரஞ்சீவியுடன் இணையும் பிரபல இயக்குனர்!

சிரஞ்சீவியுடன் இணையும் பிரபல இயக்குனர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளியான படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், அவருக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். பாகுபலி, கேஜிஎப் பட பாணியில் இப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.250 கோடி என அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் முதல் பாகம் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. விரைவில் ...
மகேஷ் பாபு படத்தில் விக்ரம் நடிக்கவில்லை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மகேஷ் பாபு படத்தில் விக்ரம் நடிக்கவில்லை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விக்ரமின் 60-வது படம் ‘மகான்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்திருந்தனர். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்து நடிகர் மகேஷ் பாபு நடிக்கவுள்ள 28வது படத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் இப்படத்தில் விக்ரம் வில்லன் கதாப்பாத்திரத்தில் பேசப்பட்டது.   இந்நிலையில் விக்ரம் தரப்பிலிருந்து இந்த தகவல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் “மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் அனைத்தும் ...
என் சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படம் – ஹூமா குரோஷி!

என் சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படம் – ஹூமா குரோஷி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நாளை (24.02.2022) வெளிவர இருக்கும் திரைப்படம் 'வலிமை'. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, போன்ற பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை' படம் வெளியாகி வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்ததை குறித்து நடிகை ஹூமா குரேஷி பகிர்ந்துள்ளார். அவர் கூறியது, “வலிமை எனது சினிமா கேரியரில் மிகவும் சிறப்பான ஒரு படம், எனது திறமையை பரிசோதித்து கொள்ள இதன் மூலம் எனக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர...
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் வெளியீடு!

இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் வெளியீடு!* Mudaliar Brother’s Film தயாரிப்பில், உலகின் முன்னணி இசை நிறுவனமான Sony Music நிறுவனம் வழங்கும், நக்‌ஷா சரண் குரல் மற்றும் நடிப்பில், சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில், லியோ இசையில், கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்”. நவீன தலைமுறையின் இணைய உலகின் பரபரப்பை அவர்களின் உலகை சொல்லும் டிரெண்டிங் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது. இப்பாடல் வெளியீட்டு விழா இன்று ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் *தயாரிப்பாளர் மதுசரண் பேசியதாவது…* எங்களை வாழ்த்த வந்துள்ள நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. M3 Mudaliyar Brother’s Film உடைய முதல் தயாரிப்பு. எங்கள் மகளுக்காக இதனை ஆரம்பிக்கவில்லை, நல்ல தயாரிப்புகளை உருவாக்க வேண்டுமென ஆரம்பித்துள்ளேன், நல்ல புர...
15 வருட திரைப்பயணத்தை நெகிழ்ந்து பதிவிட்ட கார்த்தி!

15 வருட திரைப்பயணத்தை நெகிழ்ந்து பதிவிட்ட கார்த்தி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, அவருடைய சினிமா பயணம் தொடங்கி 15 வருடம் ஆகியிருக்கிறது. 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான திரைப்படம் பருத்திவீரன். இவருடன் இணைந்து பிரியாமணி கதாநாயகியாக நடித்திருந்தார். கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவருடைய சினிமா பயணத்தில் இவருக்கு பருத்திவீரன் முக்கியமாக திரைப்படமாக அமைந்தது. பெரிதும் பேசப்பட்ட இப்படத்தில் கார்த்தியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர்.   அதன்பின் அவர் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ் என்று பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இன்று (23-02-2022) கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் வெளியாகி 15 வருடங்கள் ஆகியிருக்கிறது. இந்த நெகிழ்ச்சியான தருணத்தை கார்த்தி அவருடைய சமூக வலைத...