வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

திரைப்படங்கள்

மீண்டும் வரலாறு படைத்த “நாடோடி மன்னன்”!

மீண்டும் வரலாறு படைத்த “நாடோடி மன்னன்”!

MOVIES, திரைப்படங்கள்
1958 -ஆம் ஆண்டு “பொன்மனச் செம்மல்”, “புரட்சித் தலைவர்” எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “நாடோடி மன்னன்”. அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான். இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும்.. திரைக்கதையை சி.கருப்புசாமி, கே.ஸ்ரீனிவாசன் மற்றும் ப.நீலகண்டன் ஆகியோரும் இணைந்து எழுதினார்கள். இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி,  சரோஜா தேவி  மற்றும்  எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள். அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில்,  எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன்  இணைந்து “எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்” சார்பில் தயாரித்தார்கள். இப்படம் எம்.ஜி.ஆருக்கு 1...
ரஜினியின் காலா – படத்துக்கு கிடைத்த U/A சென்சாருடன் ரிலீஸாகுமா?

ரஜினியின் காலா – படத்துக்கு கிடைத்த U/A சென்சாருடன் ரிலீஸாகுமா?

CINI NEWS, திரைப்படங்கள்
காலா படம் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளிவருமா என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்துக்கான தணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் முதலாவதாக வெளிவருமென எதிர்பார்க்கப்பட்ட வேளையில், காலா படம்தான் முதலாவதாக வெளிவரவிருக்கிறது என்று சொல்லும்விதமாக காலா படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்தார் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ். இதையடுத்து வெளியான காலா டீசரும் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. ஆனால், படம் அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியாகுமா என்பது இன்றளவும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஏனெனில் தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தப் போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே தயாரிப்பாளர்கள் சங்கப் போராட்டம் முடிவை எட்டிய பிறகே அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 27ஆம் தேதி காலா படமானது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் காலா படத்துக்கு...
அழகான பெண்ணுக்கும் அழகில்லாத பையனுக்கும் உள்ள காதலை சொல்லும் “தேவகோட்டை காதல்”

அழகான பெண்ணுக்கும் அழகில்லாத பையனுக்கும் உள்ள காதலை சொல்லும் “தேவகோட்டை காதல்”

MOVIES, திரைப்படங்கள்
ஹப்பாஸ் மூவி லைன் என்ற பட நிறுவனம் தேவகோட்டை காதல் என்ற படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் சீனு என்ற புதுமுகம் கதானாயகனாக நடிக்கிறார். நாயகியாக சுவிதா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.  மற்றும் கஞ்சா கருப்பு பாவாலட்சுமணன் தீப்பெட்டி கணேசன் கிளி ராமச்சந்திரன் மெடிமிக்ஸ் ஏ.வி.அனு சதாந்தன் மனோஜ் சலாம் ஸ்ருதி ரஜினி முரளி வத்சலா டீச்சர் சுஜித்திரா ஆகியோர் நடிக்கிறார்கள் கதை              -        சீனு  திரைக்கதை   -        ARK , PPA ரஹ்மான் பாடல்கள்      -        காதல்மதி  இசை             -        ஜோனபக்தகுமார் எடிட்டிங்        -        இப்ரு ஸ்டண்ட்        -        ஜீரோஸ் நடனம்           -        ராஜேஷ் ஒளிப்பதிவு    -        ரஞ்சித் ரவி இணை தயாரிப்பு  -    பீனா காசிம், வத்சலா டீச்சர் சபீனா .கே எழுதி இயக்குகிறார்  -   A.R.K. இவர் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றியவர். ...
அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!

அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!

CINI NEWS, திரைப்படங்கள்
உச்சத்தை தொடும் விஷயங்கள் மிக எளிதில் அடையக்கூடியவை அல்ல, அதற்கு கடின உழைப்பும், பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கும் பேரார்வமும், தைரியமும் வேண்டும். குறிப்பாக நடிகர்களுக்கு தங்களது சாதகமான எல்லையை விட்டு புதிய விஷயங்களில் இறங்க நிறைய தைரியம் வேண்டும். அதர்வா முரளி போன்ற நிறைய பொறுப்புகளை கொண்டிருக்கும் நடிகர்கள் நல்ல திறமையான இயக்குனர்களுடன் வேலை செய்யும் போது அந்த சூழல் இன்னும் மாறி விடுகிறது. இயக்குனர் கண்ணனனுடன் அதர்வா இணையும் பூமராங் படம் அப்படி ஒரு விஷயம் தான்.    இந்த படத்தில் மூன்று வெவ்வேறு விதமான தோற்றங்களில் நடிக்கிறார் அதர்வா. அதற்காக பல மணி நேரம் கஷ்டப்பட்டு ப்ரோஸ்தடிக் மேக்கப் செய்து கொள்கிறார். அதை பற்றி இயக்குனர் கண்ணன் கொஞ்சம் விளக்கமாக கூறும்போது, "இந்த கதையும், அதர்வாவின் கதாபாத்திரமும் உருவான போது அதற்கு மூன்று வெவ்வேறு தோற்றங்கள் தேவைப்பட்டது. எனவே விருது பெற்ற மேக்...
மே மாதம் முதல் வாரம் ரிலீஸாகப் போகும்  ‘Mr.சந்திரமெளலி’

மே மாதம் முதல் வாரம் ரிலீஸாகப் போகும் ‘Mr.சந்திரமெளலி’

MOVIES, திரைப்படங்கள்
எந்த தொழில் நமக்கு சோர்வே தராததோ, அதுவே நமக்கான தொழிலாகும். அப்படியாக சினிமா தொழிலைக் கருதும் நடிகர்கள் , தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணி புரியும் படம் தான் 'Mr.சந்திரமௌலி'. சரியான திட்டமிடுதல் படத்தின் பாதி வெற்றியை தீர்மானிக்கும் என்பதை உறுதியாக நம்பும் அணி இது. திரு இயக்கத்தில், கார்த்திக், கவுதம் கார்த்திக்,வரலக்ஷ்மி சரத்குமார்,  ரெஜினா கசண்டரா  ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'Mr.சந்திரமௌலி' முதல் நாள் படப்பிடிப்பிலிருந்தே சரியான திட்டமிடுதளை பின்பற்றிவரும் அணியாகும். இந்த படத்தை BOFTA Media works India Private Limited சார்பில்  'Creative Entertainers and Distributors' நிறுவனம் தயாரிக்கின்றது. இது குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் திரு. தனஞ்செயன் பேசுகையில் , '' படத்தின் எல்லா கட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டது. படத்திலுள்ள நான்கு பாடல்களில் இரண்டு பாடல்கள் ஏ...
நான்கு மொழிகளில் தயாராகும் மன்சூரலிகானின் “கடமான்பாறை“

நான்கு மொழிகளில் தயாராகும் மன்சூரலிகானின் “கடமான்பாறை“

MOVIES, திரைப்படங்கள்
பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.   அடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக  நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா...
வெற்றிமாறனின்  கம்பெனியுடன் கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் இணைந்து மிக மிக அவசரம்  ர்லீஸ்!

வெற்றிமாறனின் கம்பெனியுடன் கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் இணைந்து மிக மிக அவசரம் ர்லீஸ்!

CINI NEWS, திரைப்படங்கள்
சில படங்கள் திரைக்கு வரும் முன்பே ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டு வரும். காக்கா முட்டை, கோலிசோடா, லென்ஸ், துருவங்கள் 16, அருவி போன்ற படங்கள் வெற்றியைத் தீர்மானித்துவிட்டு மக்களை ஈர்த்த படங்களாக வரிசைப்படுத்தலாம்..  அதேபோல, மிக மிக அவசரம் படத்திற்கான அதிர்வு படம் பார்த்தவர்கள் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வேகமாகப் பரவி வருகிறது.    பார்த்துப் பார்த்து படம் பண்ணும், நுணுக்கமான தேர்வு மூலம்  சிறு படங்களுக்கு கைகொடுக்கும் இயக்குநர் வெற்றி மாறன் இப்படத்தை வெளியிட முன் வந்ததிலாகட்டும்,    கோலிசோடா2  டத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளவரும், முக்கியமான திரையரங்குகளில்  படத்தை வெளியிட்டு, அதைத் தெளிவாக மக்களிடம் கொண்டு செல்வதில் நல்ல பெயர் எடுத்திருப்பவருமான கிளாப் போர்டு புரொடக்சன்ஸ் வி சத்தியமூர்த்தி   இயக்குநர் வெற்றிமாறனுடன் இணைந்து வெளியிட முன் வந்திருப்பதிலாகட்டும்,   மிக மிக அவச...
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா- படம் முக்கிய கட்டத்தை எட்டியது!

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா- படம் முக்கிய கட்டத்தை எட்டியது!

CINI NEWS, திரைப்படங்கள்
சினிமா விநியோகத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ஆரா சினிமாஸ், `அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் நிறைவு பெற்றுள்ளது. `ராஜதந்திரம்' புகழ் வீரா மற்றும் `குக்கூ' புகழ் மாளவிகா நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர். புதுமுகம் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படமாகும். சுதர்ஷன் ஒளிப்பதிவில், எட்வர்ட் தயாரிப்பு டிசைனில், பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பில், மாட்லி ப்ளூஸ் இசையில் `அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா' உருவாகி வருகிறது. நடிகர்கள் பசுபதி, ரோபோ ஷங்கர், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ''ஒரு படத்தை கொடுத்த அவகாசத்தில், கொடுத்த பட்ஜெட...
‘உத்தரவு மகாராஜா’ படப்பிடிப்பு அமர்களமாக நிறைவு!

‘உத்தரவு மகாராஜா’ படப்பிடிப்பு அமர்களமாக நிறைவு!

CINI NEWS, திரைப்படங்கள்
உதயாவின் ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகி வந்த ‘உத்தரவு மகாராஜா’ படத்தின் இறுதிகட்ட கிராபிக்ஸ்க்கான படப்பிடிப்பு ஏராளமான குதிரைகள், வீரர்கள் மற்றும் ராஜா என அமர்க்களமாக  நிறைவுற்றது.கிராபிக்ஸ் பணிகள் இந்தப் படத்திற்கு முக்கியமானது வெளிநாட்டில் இருந்து பல  தொழில் நுட்ப வல்லுனர்கள் இதற்காகவே வரவழைக்கப்பட்டுள்ளனர்.  மற்றும் ஏராளமான துணை நடிகர்களோடு பல காட்சிகள் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டது. படத்தில் கிராபிகிஸ்  மற்றும் சவுண்ட் எஃபக்ட் மிக முக்கியத்தும் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் மிக முக்கியமான ஒரு காட்சிக்காக இதன் கதாநாயகன் உதயா மொட்டை அடித்து அந்த காட்சியில் நடித்தார். இத்திரைப்படத்தில் இது உதயாவின் ஐந்தாவது  கெட்-அப் ஆகும். இளைய திலகம் பிரபு மிக முக்கியமான மகாராஜா கதாபாத்திரத்தில் நடிக்க, நாசர், ஸ்ரீமன், மனோபாலா, கோவை சரளா, M.S.பாஸ்கர், குட்டி பத்மின...
அழிந்து வரும் கிராமத்து  வாழ்வியலை சொல்ல வரும் ‘உளிரி’ திரைப்படம்..!

அழிந்து வரும் கிராமத்து வாழ்வியலை சொல்ல வரும் ‘உளிரி’ திரைப்படம்..!

CINI NEWS, திரைப்படங்கள்
ஸ்ரீலட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ்  ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘உளிரி.’ இந்தப் படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக சயனி நடித்துள்ளார். மற்றும்  பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோரும் நடித்துள்ளனர்.      ஒளிப்பதிவு – வெங்கட், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை இயக்கம் – சாமி கலைக்குமார், சண்டை இயக்கம் – மெட்ரோ மகேஷ், நடன இயக்கம் – மது மாலிக், தயாரிப்பு மேற்பார்வை – A நாகராஜ், தயாரிப்பு  – எம்.ஸ்ரீனிவாசன்,  சுந்தரி,  எஸ்.யோகேஷ், இசை, பாடல்கள், எழுத்து, இயக்கம், – R.ஜெயகாந்தன். படம் பற்றி இயக்குநர் ஆர்.ஜெயகாந்தன் பேசும்போது, “சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை காவிரி ஆற்று படுகை மனிதர்களின் பஞ்சம் தீர்க்க உணவாக, அவர்களது பண்பாட்டின் கூறாக இருந்த ‘உளிரி’ எனும் மீன...