வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

திரைப்படங்கள்

மொட்டை தலையுடன் மாஸ் காட்டும் பகத் பாசில்!

மொட்டை தலையுடன் மாஸ் காட்டும் பகத் பாசில்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மொட்டை தலையுடன் மாஸ் காட்டும் பகத் பாசில்! சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். பகத் பாசிலின் வில்லன் போஸ்டர் இன்று வெளியானது. மொட்டை தலையுடன் மாஸாக இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்த படக்குழு, முதல் பாகத்தை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
நல்ல நேரம் பொறந்தாச்சு…. மீண்டும் அதிரடியாக களமிறங்கும் வடிவேலு!

நல்ல நேரம் பொறந்தாச்சு…. மீண்டும் அதிரடியாக களமிறங்கும் வடிவேலு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நல்ல நேரம் பொறந்தாச்சு.... மீண்டும் அதிரடியாக களமிறங்கும் வடிவேலு! இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படப்பிடிப்பின்போது சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் தனக்கு ரூ.10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஷங்கர் தரப்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் காரணமாக வடிவேல் புதிய படங்களில் நடிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்காமல் இருக்கிறார். தற்போது இந்த பிரச்சினையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வடிவேலுவிடம் கேட்டபோது, ‘மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு போல் இருக்கிறது. என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத...
வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்!

வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்! வெப் தொடரில் நடிக்க சமீபகால கதாநாயகிகள் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம், சினிமாவை விட வெப் தொடர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள். வெப் தொடர்களுக்கு தணிக்கை கிடையாது. படுகவர்ச்சியான வசனங்களும், ஆபாசமான காட்சிகளும் வெப் தொடர்களில் அனுமதிக்கப்படுகின்றன. படுக்கை அறை காட்சிகள் தாராளமாக இடம்பெறுகின்றன. இதற்காகவே அதில் நடிக்கும் நடிகர்-நடிகைகளுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள். அதிக சம்பளம் என்ற வசிய வலையில் சிக்கி, படுகவர்ச்சியாக நடித்துள்ள கதாநாயகிகள் வருமாறு:- 1. சமந்தா. இவர், ‘பேமிலி 2’ என்ற வெப் தொடரில் படுகவர்ச்சியாக நடித்து இருக்கிறார். 2. ரெஜினா கசன்ட்ரா. பெண்ணும் பெண்ணும் உறவு கொள்கிற ‘லெஸ்பியன்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 3. அமலாபால். தன்னை விட பல வயது மூத்த ஒரு ஆணுடன் உறவு வைத்துக் கொள்கிற பெண்ணாக,...
‘தலைவி’ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!

‘தலைவி’ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
‘தலைவி’ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு! ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக படத்தை திரையிடுவது ஒத்திவைக்கப்பட்டது. நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு தலைவி படத்தை வெளியிடுவோம் என கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார். தற்போது தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 'தலைவி' திரைப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் அதிமுகவினரிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெறும். ...
முழு படத்தையும் ஒரே வாரத்தில் நடித்து முடித்த ஹன்சிகா!

முழு படத்தையும் ஒரே வாரத்தில் நடித்து முடித்த ஹன்சிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
முழு படத்தையும் ஒரே வாரத்தில் நடித்து முடித்த ஹன்சிகா!\ நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘105 மினிட்ஸ்’. இப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ராஜா துஷ்ஷா இயக்கி உள்ளார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, கொரியா, சீனா போன்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். நடிகை ஹன்சிகா, ஒரு வாரத்தில் முழு படத்திலும் நடித்து முடித்துவிட்டாராம். இதுதவிர தமிழில் உருவாகி உள்ள மஹா படத்திலும் நடித்து முடித்துள்ளார் ஹன்சிகா, இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதில் நடிகர் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இது நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் என்பது கு...
‘கே.ஜி.எப். 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கே.ஜி.எப். 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘கே.ஜி.எப். 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு! கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதலில் இப்படத்தை இந்தாண்டு ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், கே.ஜி.எப். இரண்டாம் பாகத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அடுத்தாண்டு ஏப்ரல் 14-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது....
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்!

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்! மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்க இருக்கிறது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறார்கள். இந்த படப்பிடிப்பில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷிவானி இணைய இருப்பதாக த...
மகான்-ஆக மாறிய விக்ரம் – வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மகான்-ஆக மாறிய விக்ரம் – வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மகான்-ஆக மாறிய விக்ரம் - வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தை இதுவரை ‘சியான் 60’ என்று அழைத்து வந்தனர். தற்போது இப்படத்திற்கு ‘மகான்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது....
Simbu’s Mother Usha Thrashes Vishal on “Red Card” issue!

Simbu’s Mother Usha Thrashes Vishal on “Red Card” issue!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
Simbu's Mother Usha Thrashes Vishal on "Red Card" issue! Simbu’s mother Usha T. Rajendar released a video thrashing former President of Tamil Film Producers Council Vishal who imposed red card against the “Eeswaran" actor. The Tamil Film Producers Council and the Film Employees Federation of South India were involved in a face-off after FEFSI allowed the shoot of Silambarasan TR’s new film 'Vendhu Thanindhathu Kaadu' (VTK), directed by Gautham Vasudev Menon. The TPFP has reportedly requested FEFSI not to cooperate with the film's shot till Simbu pays the pending dues. The shooting of 'Vendhu Thanindhadhu Kaadu was abruptly stopped on Thursday due to this issue. Now Simbu's mother Usha opened up about their side of the events and slammed Vishal for the judgement he provided against S...
சூர்ப்பனகையை முடித்த ரெஜினா!

சூர்ப்பனகையை முடித்த ரெஜினா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சூர்ப்பனகையை முடித்த ரெஜினா! பிரபல நடிகையான ரெஜினா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூர்ப்பனகை’. இவருடன் இப்படத்தில் அக்‌ஷரா கவுடா, மன்சூர் அலிகான், ஜெய பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் ராஜு இயக்கி இருக்கும் இப்படம் இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஆப்பிள் ட்ரி ஸ்டுடியோஸ் சார்பில் ராஜசேகர் வர்மா தயாரித்திருக்கும் இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், குற்றாலம் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இதையடுத்து பின்னணி வேலைகளை படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரெஜினா இப்படத்தில் தொல் பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கும் நிலையில், அடுத்ததாக விரைவில் இதன் டிரைலரை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள்...