பிகில் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
விஜய் நடித்துள்ள ’பிகில்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று படக்குழுவினர் கூறிய நிலையில் இப்போது இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’பிகில்’ படத்தின் ஆடியோ வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ரிலீஸாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
அதோடு, ஒவ்வொரு ஆண்டும் தான் விஜய் படத்தின் ஆடியோ விழாவில் அவருடைய பேச்சை ரசிக்க ஆவலுடன் காத்திருப்பேன் என்றும், அந்த வகையில் இந்த ஆண்டும் வரும் 19ஆம் தேதி நான் மட்டுமின்றி கோடிக்கணக்கான விஜய் ரசிகர்களும் அவருடைய அற்புதமான பேச்சை கேட்டு ரசிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுடன் உலகில் உள்ள திறமையான இசைக்கலைஞர்கள் இணைந்து இசை விருந்து அளிக்க உள்ளார்கள் என்றும் இதனை நேரில் கண்டு ரச...









