‘இரும்புத்திரை’ கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய போனை தொடவே பயமாக இருந்தது – சமந்தா
விஷால்-சமந்தா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரும்புத்திரை’. இப்படத்தை மித்ரன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நடித்தது குறித்து சமந்தா கூறும்போது, ‘இரும்புத்திரை படத்தின் கதையை கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மை சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது. படத்தின் கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய போனை தொடவே பயமாக இருந்தது. இந்த படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் உள்ளது, அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிக தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும். நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசும்.
எனக்கு புதுமுக இயக்குனர்களோடு இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் தான். ஆனால் இயக்குனர் மித்ரன் ஒரு போதும் என்ன...









