வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

திரைப்படங்கள்

விஷால் நடிப்பில் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படம்

விஷால் நடிப்பில் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *'தாமிரபரணி', 'பூஜை' வெற்றிப் படங்களுக்கு பிறகு விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படம்* *'தாமிரபரணி', 'பூஜை' வெற்றி கூட்டணியான விஷால் மற்றும் இயக்குநர் ஹரியை மீண்டும் இணைத்து ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது* 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ஒன்றுக்காக மீண்டும் இணைகின்றனர். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கின்றன. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத திரைப்படங்களை பார்வையாளர்கள் ரசிக்கும் விதத்தில் எடுப்பதில் வ...
சாந்தனு – கயல் ஆனந்தி நடிப்பில் விக்ரம் சுகுமார் இயக்கிய இராவண கோட்டம் மே 12ல் ரிலீஸ்!

சாந்தனு – கயல் ஆனந்தி நடிப்பில் விக்ரம் சுகுமார் இயக்கிய இராவண கோட்டம் மே 12ல் ரிலீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சாந்தனு - கயல் ஆனந்தி நடிப்பில் விக்ரம் சுகுமார் இயக்கிய இராவண கோட்டம் மே 12ல் ரிலீஸ்! துபாயில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் திட்டக்குடியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பில் விக்ரம் சுகுமார் இயக்கத்தில் உருவான படம் இராவண கோட்டம். இதில் சாந்தனு, பிரபு, கயல் ஆனந்தி, இளவரசு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் துபாயில் பிரமாண்டமாக நடை பெற்றது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்களும், படத்தின் டிரைலர் காட்சிகளும் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 12ம் தேதி உலகம் முழுவதும் இராவணகோட்டம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராமனாதபுரம் சுற்றுவட்டார பகுதியில் நிலவி வரும் மக்கள் சந்திக்கும் சிக்கலை இந்த படம் பேசி உள்ளதாக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத...
பாண்டியர்களின் கதையா “யாத்திசை” – கோடங்கி விமர்சன்ம் 4/5

பாண்டியர்களின் கதையா “யாத்திசை” – கோடங்கி விமர்சன்ம் 4/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், விமர்சனம்
  படிக்கிற காலத்துல வரலாற்று சம்பவங்களை புத்தகங்கள படிச்சிருப்போம். ஆனா இதலாம் தாண்டி மனசுல நிக்கிறது எப்பவும் சினிமா தான். புராணக்கதைகள், வரலாற்று கதைகள், சுதந்திர போராட்ட கதைகள் இப்படி எந்த கதையா இருந்தாலும் அதை அந்த கால கட்டத்துக்கு ஏற்ற மாதிரியான காட்சிகளை வைத்து மக்கள் மனசுல நச்சுன்னு இடம்பிடிக்கிறது சினிமாதான். சமீபத்துல வெளியான பொன்னியின் செல்வன் வெற்றி எல்லாருக்கும் தெரிஞ்ச ஒன்னுதான். இன்னும் விளக்கமா சொல்லனும்னா த்ரிஷா பெயர் குந்தவையாகவும், ஐஷ்வர்யா ராய்யோட பெயர் நந்தினின்னும், விக்ரமோட பெயர் கரிகால சோழன்னும் , ஜெயம்ரவிய அருண்மொழி வர்மனாகவும் தான் மக்கள் மனசுல பதிவாகியிருக்கு. அந்த அளவுக்கு வரவேற்பு, வசூல் பெற்ற படம், ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் உட்பட பல படங்கள்ல சோழர்கள் பெரும்பகுதியாகவும், பாண்டியர்கள ஒரு பகுதியாகவும் காட்டிருந்தாங்க. அதுவும் நெகட்டி...
திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த ‘ஜெனி

திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த ‘ஜெனி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த 'ஜெனி'..!   பல்லாண்டுகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி எழுத்தாளராக தயாரிப்பாளராக வலம் வந்தவர் திரைப்பட வித்தகர் தூயவன். அவரது புதல்வர் பாபு தூயவன் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் பயின்று 'கதம் கதம்' என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். 'இட்லி' என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார். அவரது மேற்பார்வையில் அவரது துணைவியார் A. முஸ்தரி தயாரித்திருக்கும் திகில் படம் தான் 'ஜெனி'. திரைப்படக் கல்லூரியில் பயின்று சில படங்களையும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கும் நித்தியானந்தம்.B இயக்கத்தில் இந்தப்படம் உருவாகி இருக்கிறது பாரீஸ் ஜெயராஜ் படத்தின் முக்கிய வேடத்தில் நடித்த விவாந்த் நாயகனாக நடித்துள்ளார். 'மைடியர் பூதம்' திரைப் படத்தில் குழந்தை நாயகனாக மிரட்டிய பரம் விக்னேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ...
பொன்னியின் செல்வன் படத்திற்கே இது தான் நிலைமை – குலசாமி பட விழாவில் இயக்குநர் அமீர்

பொன்னியின் செல்வன் படத்திற்கே இது தான் நிலைமை – குலசாமி பட விழாவில் இயக்குநர் அமீர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  பொன்னியின் செல்வன் படத்திற்கே இது தான் நிலைமை - குலசாமி பட விழாவில் இயக்குநர் அமீர் MIK Productions Private Limited தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் , மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் 'குலசாமி'. ஏப்ரல் 21 ஆம் தேதி திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் சரவண சக்தி பேசியதாவது… இப்படத்திற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு முதல் நன்றி. அவர் வசனம் எழுதி தந்ததால் தான் இப்படம் மிகபெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சிறப்பான காவல் அதிகாரியாக இருந்த ஜாங்கிட் அவர்கள் எங்களுக்காக இப்படத்தில் நடித்திருக்கிறா...
கரிகாலனை சுற்றி விடை தெரியா மர்மங்கள் ஏராளம் உண்டு – இயக்குனர் மணிரத்னம் பேச்சு

கரிகாலனை சுற்றி விடை தெரியா மர்மங்கள் ஏராளம் உண்டு – இயக்குனர் மணிரத்னம் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்‌ஷன்ஸ் -மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்த தயாரிப்பில் பொன்னியின் செல்வன் ஏப்ரல் 28 முதல் திரையில் !!* *இந்திய திரை பிரமாண்டத்தை அடுத்த கட்டத்திற்கு உயரத்திய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.* இதனையொட்டி படக்குழுவினர் சோழா சுற்றுலா பயணமாக இந்தியாவெங்கும் பயணித்து படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரை தொடர்ந்து படக்குழுவினர் சென்னையில் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வினில் இயக்குநர் மணிரத்னம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபியா துலிபாலா முதலானோர் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி கூறுகையில், " எங்கு போனாலும் முதலில் மணிரத்னம் ...
விமலின் முழுமையான காமெடி படமாம் தெய்வ மச்சான்!

விமலின் முழுமையான காமெடி படமாம் தெய்வ மச்சான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *கிராமிய பின்னணியிலான முழு நீள குடும்ப பொழுதுபோக்கு நகைச்சுவை சித்திரம் 'தெய்வ மச்சான்'* *'தெய்வ மச்சான்' பத்திரிக்கையாளர் சந்திப்பு* *'தெய்வதிரு' மரியாதையை விரும்பியவர்- பாண்டியராஜன் சொன்ன நகைச்சுவை கதை* உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தெய்வ மச்சான்'. அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் 'ஆடுகளம்' நரேன், பால சரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேமில் ஜெ அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு காட்வின் ஜெ. கோடன் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கு பின்னணி இசை அஜீஸ் கவனித...
முதன்முறையாக இணைந்திருக்கும் பிரபுதேவா – அந்தோணி தாசன் கூட்டணி

முதன்முறையாக இணைந்திருக்கும் பிரபுதேவா – அந்தோணி தாசன் கூட்டணி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
*முதன்முறையாக இணைந்திருக்கும் பிரபுதேவா - அந்தோணி தாசன் கூட்டணி* 'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் 'முசாசி' திரைப்படம், கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும், விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் "முசாசி" ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் 'நடனப்புயல்' பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, மலையாள நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்...
ஏப்ரல் 21 முதல், கனா காணும் காலங்கள் தொடரின் சீசன் 2வை OTT தளத்தில் பார்க்கலாம்!

ஏப்ரல் 21 முதல், கனா காணும் காலங்கள் தொடரின் சீசன் 2வை OTT தளத்தில் பார்க்கலாம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஏப்ரல் 21 முதல், கனா காணும் காலங்கள் தொடரின் சீசன் 2வை, ஸ்ட்ரீம் செய்ய உள்ளது !! கனா காணும் காலங்கள் தொடரின் சீசன் 2 , ஏப்ரல் 21 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகிறது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கனா காணும் காலங்கள் தொடரின் சீசன் 2 வெளியீட்டுத் தேதியை, ஒரு அழகான புரமோ வீடியோ மூலம் அறிவித்துள்ளது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் முதலில் ஒளிபரப்பப்பட்ட 'கனா காணும் காலங்கள்' தொடர், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்பட்ட, ஒரு கிளாசிக் தொடராகும். அனைவராலும் விரும்பப்பட்ட இந்த பிரபலமான நிகழ்ச்சி, கடந்த ஆண்டு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒரு வெப் சீரிஸாக புதிய அவதாரத்தில் மீண்டும் வந்தது. புதிய நடிகர்கள் மற்றும் நவீனக் கால கதைக்களத்தில் அட்டகாசமாக எடுக்கப்பட்டிருந்த இந்த சீரிஸ், ரசிகர்களிடம் மிகப்பெரிய வ...
ZEE5 தளத்தின் “அயலி” இணையத்தொடர்  பள்ளி மாணவிகளுக்காக சிறப்பு திரையிடல் !!

ZEE5 தளத்தின் “அயலி” இணையத்தொடர் பள்ளி மாணவிகளுக்காக சிறப்பு திரையிடல் !!

HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  பள்ளி மாணவிகளுக்காக ZEE5 தளத்தின் “அயலி” இணையத்தொடர் சிறப்பு திரையிடல் !! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு வாழ்த்தினார்!! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பள்ளி மாணவிகளுக்காக “அயலி” இணையத் தொடர் சிறப்பு திரையிடல் !! பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வலையில் ZEE5 தளத்தில் வெளியாகி பாரட்டுக்களை குவித்த அயலி இணையத் தொடர், கொளத்தூர் எவர்வின் வித்யாஸ்ரம் (Everwin Vidhyashram, Kolathur ) பள்ளி மாணவிகளுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. ZEE5 நிறுவனம் முன்னெடுத்த இவ்விழாவினில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்ரீமதி. காகர்லா உஷா ஐஏஎஸ் அரசின் முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு திரு கே. நந்தகுமார் ஐஏஎஸ்., கமிஷனர் பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். &n...