‘ஹனு-மேன்’ படத்தின் டீசர் வெளியீடு!
*பான் இந்திய திரைப்படமான 'ஹனு-மேன்' படத்தின் டீசர் வெளியீடு*
இளம் நட்சத்திர நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஹனு-மேன்' படத்தில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
'ஜோம்பி ரெட்டி' எனும் திரைப்படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், திறமையான இளம் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் 'ஹனு-மேன்' எனும் பான் இந்திய அளவிலான சூப்பர் ஹீரோ திரைப்படம் தயாராகியிருக்கிறது.
இயக்குநர் பிரசாந்த் வர்மா அண்மையில் வெளியிட்ட 'ஹனு-மேன்' படத்தின் காட்சி துணுக்குகளில் நாயகன் தேஜா சஜ்ஜாவின் கதாபாத்திரத்தை பிரத்யேக பார்வை மூலம் அறிமுகப்படுத்தியிருந்தார்.
இதற்கு பார்வையாளர்களிடத்தில் பெரும் தாக்கத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசர், பார்வையாளர்கள் தங்களின் கற்பனையில் கூ...









