96, நோட்டா ரிலீசால் போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை – தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
தமிழ் திரையுலகில் புதிய படங்களை திரையிடுவதில் ஒழுங்கற்ற நிலை இருந்தது. பெரிய படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் சிறு பட்ஜெட் படங்களை வெளியிடுவதில் சிரமங்கள் இருந்தன. அந்த படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் மாதக்கணக்கில் முடங்கின. இந்த குளறுபடிகளை தீர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் படங்களை வெளியிடுவதில் புதிய வரைமுறைகளை வகுத்தது.
ஒவ்வொரு படத்துக்கும் சங்கமே தேதிகளை வெளியிட்டு ஒதுக்கி கொடுத்தது. இதன்படி வாரத்துக்கு 2, 3 படங்கள் திரைக்கு வந்தன. பெரிய நடிகர்கள் படங்களை வாரத்தின் முதல் இரண்டு வாரத்திலும், கடைசி வாரத்திலும் திரையிட தேதிகள் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளதால் அந்த படங்களை வெளியிடுவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த வாரம் 5-ந் தேதி உதயா நடித்துள்ள உத்தரவு மகாராஜா, சமுத்திரக்கனியின் ஆண்தேவதை, ஜெய் நடித்துள்ள ஜ...









