புரட்சிகரமான மாற்றம் நிகழ வேண்டும் என்று துடிக்கிற அனைவருக்கும் போதிக்கிற ஒரு வழிகாட்டுதல் படமாக “அறம் செய்” அமைந்திருக்கிறது – தொல் திருமாவளவன் வாழ்த்து
இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் உருவாக்கத்தில் உருவாகிய அறம் செய் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து தொல்.திருமாவளவன் பாராட்டி பேசியதாவது :
இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் அவர்களின் கதை எழுத்து இயக்கம் ஒளிப்பதிவு என்ற அனைத்து பொறுப்புகளையும் ஏற்று உருவாக்கி இருக்கிற படைத்திருக்கிற அறம் செய் திரைப்படத்தை பார்த்தோம்.
சுவேதா அவர்கள் இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் அவர்கள் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். ஆட்சி மாற்றம் அல்ல அரசியல் மாற்றம் என்பதே இலக்கு என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இத்திரைப்படத்தை அவர் உருவாக்கி இருக்கிறார்.
கல்லூரிகளை தனியார் மயமாக்குவது அதனால் விழிமுறைகளின் சமூகத்தை சார்ந்த மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஒரு கதையோட்டமாகவும் அடிப்படை மாற்றம் இல்லாமல் அரசியலில் எந்த புதிய மாற்றத்தையும...









