வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

திரைப்படங்கள்

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!* தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தங்களின் நன்றியை தெரிவித்தனர். இந்நிகழ்வினில் *இயக்குநர் ஜெகன் பேசியதாவது..,* இப்படத்தில் நானும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் உழைப்பை நேரில் பார்த்தேன், பிரமிப்பாக இருந்தது. நம்ம எல்லோரும் இந்தப் படத்தை பார்த்...
குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2

குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2! 2014ஆம் ஆண்டு வெளியான குற்றம் கடிதல் திரைப்படம், இயக்குநர் பிரம்மா G இயக்கத்தில், JSK சதிஷ் குமார் தயாரிப்பில் உருவாகி, ஆசிரியர்–மாணவர் உறவை மையமாகக் கொண்ட ஆழமான கதை மூலம் தேசிய விருதுகளை வென்று தனித்துவமான இடத்தைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த படம், இந்திய மற்றும் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றது. இப்போது, அதன் தொடர்ச்சியாக குற்றம் கடிதல் 2, இயக்குநர் S. K. ஜீவா இயக்கத்தில், மீண்டும் JSK சதிஷ் குமார் தயாரிப்பில் உருவாகிறது. இவரே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். குற்றம் கடிதல் முதல் பாகம் சமூக அவலம் பற்றிப் பேசியது. ஆனால் இந்த படம் அத்தன்மையிலிருந்து விலகி, ஒரு சமூக த்ரில்லர் வகையில் உருவாகி, அதே சமயம் பள்ளிக்கூடப...
‘ஜோ’ இயக்குநருடன் கைகோர்க்கும் ஜி.வி.பிரகாஷ்!

‘ஜோ’ இயக்குநருடன் கைகோர்க்கும் ஜி.வி.பிரகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ‘ஜோ’ இயக்குநருடன் கைகோர்க்கும் ஜி.வி.பிரகாஷ் லார்க் ஸ்டூடியோஸ் – பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணையும் புதிய படம் லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து இசையமைக்க உள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ‘கருடன்’ மற்றும் ‘மாமன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படமாக இது உருவாகிறது. இதன் ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினை ‘ஜோ’ வெற்றி படத்தினை இயக்கிய ஹரிஹரன் ராம் இயக்கவுள்ளார். அவர் சொன்ன கதையைக் கேட்டுவிட்டு நாயகனாக நடிப்பது மட்டுமன்றி இசையமைத்து, தயாரிப்பாளராக இணையவும் முடிவு செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இருந்து வேறுபட்டு, முழுக்க வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடி...
CinemaCon 2026 விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” திரைப்படம் !!

CinemaCon 2026 விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” திரைப்படம் !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ராக்கிங் ஸ்டார் யாஷ்: ‘டாக்ஸிக்’ ஒரு புதுமையான கேங்ஸ்டர் சினிமா அனுபவம்! CinemaCon 2026 விழாவில் கவனம் ஈர்த்த “டாக்ஸிக்” திரைப்படம் !! CinemaCon 2026 விழாவில் லாஸ் வேகாஸ் நகரில் இந்திய சினிமா உலகளவில் கவனம் ஈர்த்த வேளையில், நடிகர் யாஷ் தனது 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்' ( Toxic: A Fairy Tale for Grownups ) படம் குறித்து பகிர்ந்த கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நமித் மல்ஹோத்ரா உடன் கலந்து கொண்ட அவர், இந்த படம் கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படைப்பாக இருக்குமென தெரிவித்தார். படத்தைப் பற்றி யாஷ் கூறியதாவது: “எங்கள் திரைத்துறையில் முதன்முறையாக இந்த படத்தை ஆங்கிலத்திலும் எடுத்துள்ளோம். இந்த படத்தின் கான்செப்ட் பல அடுக்குகள் கொண்டது. இது சாதாரண கேங்ஸ்டர் ஆக்ஷன் படம் அல்ல. வெளிப்படையாக பார்த்தால் இது ஒரு ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் படம் ப...
TVK விஜய்யை நக்கலடிக்கிறதா TN 2026 படம் பார்க்கலாமா? KODANKI VOICE  I KODANKI REVIEW I TN 2026

TVK விஜய்யை நக்கலடிக்கிறதா TN 2026 படம் பார்க்கலாமா? KODANKI VOICE I KODANKI REVIEW I TN 2026

HOME SLIDER, kodanki voice, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம், வீடியோ
TVK விஜய்யை நக்கலடிக்கிறதா TN 2026 படம் பார்க்கலாமா? KODANKI VOICE I KODANKI REVIEW I TN 2026     https://youtu.be/16izBL845Sw
டிஎன் 2026 – திரைப்பட விமர்சனம்  3.5/5

டிஎன் 2026 – திரைப்பட விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    டிஎன் 2026 – திரைப்பட விமர்சனம்     வட மாநிலத்தை சேர்ந்த நட்டி நட்ராஜ், சென்னைக்கு பிழைப்புக்காக வந்து எதிர்பாரதவிதமாக நடிகராகி விடுகிறார். அவரது முதல் படம் மக்களிடம் வரவேற்பு பெறுவதோடு, மக்கள் மனதில் அடுத்த எம்.ஜி.ஆர் என்ற இடத்தையும் பிடித்து விடுகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ஜமீன்தார் தம்பி ராமையாவும், நட்டி எம்.ஜி.ஆர் இடத்தை பிடிப்பார் என்பதை கணிப்பதோடு, அவருக்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து சினிமாவில் அவரை உச்ச நடிகராக்கும் பயணத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். சினிமாவில் உச்ச நடிகராக உயரும் நட்டியை அரசியல் பேச வைப்பதோடு, புதிய அரசியல் கட்சியையும் தொடங்க வைக்கும் தம்பி ராமையா, 2026 ஆம் ஆண்டு அவர் தான் தமிழகத்தின் முதல்வர், என்ற நம்பிக்கையையும் அவரது மனதில் பதிய வைத்து அரசியலில் பயணிக்க வைக்கும் நிலையில், நட்டி நட்ராஜ் எடுக...
‘Lik’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) திரைப்பட விமர்சனம் 3/5

‘Lik’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) திரைப்பட விமர்சனம் 3/5

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
  'Lik’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) திரைப்பட விமர்சனம்   காதலித்து திருமணம் செய்து கொண்ட எஸ்.ஜெ.சூர்யா, திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியால், இனி எந்த காதலர்களுக்கும் இத்தகைய நிலை ஏற்பட கூடாது என்பதற்காக, பல வருட உழைப்பிற்குப் பிறகு 2040 ஆம் ஆண்டில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany - LIK) என்ற செயலியை உருவாக்குகிறார். இந்த செயலி மூலம் தங்களுக்கு பொறுத்தமான காதல் ஜோடியை தேர்வு செய்வது முதல், அவர் எங்கே, என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதோடு, 24 மணி நேரமும் அவர்களை கேமரா மூலம் கண்காணிக்கவும் முடியும். இதனால், காதலர்களில் யார் ஏமாற்றினாலும், அது அவர்களுக்கு தெரிந்து விடுவதோடு, காதலர்கள் பிரிய நினைத்தால் இழப்பீடு வாங்கிக் கொடுத்து அதை நிறைவேற்றுகிறது இந்த லிக் செயலி. காதலர்களிடம் மட்டும் இன்றி, தம்பதிகளிடமும் பெரும் வரவேற்ப...
“வைஃப்” (Wife) திரைப்படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது!

“வைஃப்” (Wife) திரைப்படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
    “வைஃப்” (Wife) திரைப்படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது! ஒலிம்பியா மூவிஸ் சார்பில் S அம்பேத்குமார் தயாரிப்பில், ஹேமநாதன் R இயக்கத்தில் R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் இன்றைய நவீன கால "திருமண வாழ்வை" மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் “வைஃப்” (Wife). விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான  ''நீ சாரல்” மெலடி பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த இனிமையான பாடலை ஜென் மார்டின்  இசையமைத்து, சுபலக்‌ஷினியுடன்  இணைந்து பாடியுள்ளார். இயக்குநர் விஷ்ணு எடவன் இப்பாடலை  எழுதியுள்ளார். மென்மையான இசையும், மனதை வருடும் வரிகளும் இணைந்து, “நீ சாரல்” பாடலை ஒரு அழகான காதல் மெலடியாக மாற்றியுள்ளது. வெளியான உடனே இந்தப் பாடல் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில...
அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான “ராக்கா”  டைட்டில் போஸ்டர் !!

அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான “ராக்கா” டைட்டில் போஸ்டர் !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    “ராக்கா” – அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியான டைட்டில் போஸ்டர் !! அட்லீயின் உலகளாவிய ஃபாண்டஸி-ஆக்ஷன் திரைப்பட அறிவிப்பு !! இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AA22 x A6 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த மிகப்பெரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு “ராக்கா” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர், படத்தின் உலகை பற்றிய ஒரு தீவிரமான முன்னோட்டத்தை வழங்குகிறது. இருண்ட, மர்மமான உயிரினத்தை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், ஒரு புதிய உலகை முன்வைக்கிறது. இது ஒரு புதிய, வித்தியாசமான சினிமா அனுபவத்தை தரும் என சுட்டிக்காட்டுகிறது. “ராக்கா” ஒரு பிரம்மாண்டமான ஃபாண்டஸி-ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. உலகளாவிய ரசிகர்களை குறிவைத்...
பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா !! தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இப்படத்தின் முன் வெளியீட்டு தனியார் கல்லூரி அரங்கில், ஆயிரக்கணக்கான ரசிகர் பட்டாளத்தின் முன்னிலையில், படக்குழுவினர் கலந்துகொள்ள வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் எடிட்டர் பிரதீப் E ராகவ் பேசியதாவது.., இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு ஒரு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை வைத்து தனியே ஒரு படம் எடுக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு நிறைய நல்...