அங்கீகாரம் விமர்சனம் 3/5
சென்னையில் துப்புரவுத்தொழிலாளியாகப் பணியாற்றும் ஒரு பெண்மணி,கணவர் இல்லாமல் இரண்டு குழந்தைகளை – ஒரு மகன்,ஒரு மகள் -ஆகியோரைப் படிக்கவைத்து ஆளாக்க உழைக்கிறார்.அவர்கள் குடியிருக்கும் வீடு எனும் கூட்டை இடித்து அப்புறப்படுத்த அரசாங்கம் துடிக்கிறது.வேலை செய்யும் இடமிடத்தில் கேள்வி கேட்டால் தண்டனை போன்ற பல சிக்கல்களை அந்தப் பெண்மணி எதிர்கொள்கிறார்.
அவருடைய மகன்,தடகள் ஓட்டப்பந்தய வீரராக இருக்கிறார்.போதிய வசதிகள் இன்றியே ஓடுகளத்தில் பல சாதனைகள் செய்கிறார்.ஆனாலும் அவர் மீது வன்மம் கொண்டு அவரை காமன்வெல்த் எனும் சர்வதேசப் போட்டியில் விளையாட அனுமதிக்க மறுக்கின்றன விளையாட்டு ஆணையங்கள்.வலிமையும் அதிகாரமுமிக்க அவற்றை எதிர்த்து ஒற்றை ஆளாக நீதிமன்றம் சென்று தனக்காக தானே வாதாடுகிறார் அவர்.
அந்த வழக்கின் முடிவென்ன?அவர் சர்வதேசப் போட்டியில் விளையாடினாரா? இல்லையா? என்கிற கேள்விகளுக்கான விடை ச...









