சிங்கீதம் – திரைப்பட விமர்சனம் 3/5
கமல் ஹாசன்,அமலா உள்ளிட்டோர் நடிப்பில் ’பேசும் படம்’ என்ற பெயரில் பேசாத படமெடுத்த அதாவது வசனங்களே இல்லாத படத்தைக் கொடுத்த இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் பல்லாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் சிங்கீதம்.
இந்தப்படத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே பாடலாக அமைந்து ஆச்சரியப்படுத்துகிறது.
சிறையில் இருந்து விடுதலையாகும் நாயகன் அயான், அவர் குடும்பத்துக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலம் இருப்பது தெரிய வருகிறது.அந்த நிலத்தைத் தேடி குபேரபுரம் என்ற ஊருக்கு செல்கிறார்.பாலைவனம் போல் காட்சியளிக்கும் அந்தஊர் மக்கள், தோண்டப்பட்டு இருக்கும் இரண்டு தங்கச்சுரங்கங்களை நம்பி வாழ்கிறார்கள்.அதில் நாயகனுக்கு ஒரு சிக்கல்.
அதனால், தன் நிலத்திற்கான பணம் கிடைத்தவுடன் அங்கிருந்து வெளியேற திட்டம் போடுகிறார்.ஆனால்,அவரது திட்டம் நிறைவேறாதபடியும்,அவரால் அங...









