‘கலர்ஸ் தமிழ்’ சேனல் உதவியோடு ஆர்யாவின் பெண் தேடும் சுயம்வரம்..!
‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?’ என்ற கேள்விக்கு முன்பிருந்தே, தமிழகத்தில் பதில் தேடப்பட்டுக்கொண்டிருப்பது ‘இந்த ஆர்யாவுக்கு எப்ப பாஸ் கல்யாணம்?’ என்ற கேள்விக்குத்தான். சிலர் ஆர்யா செய்யும் சேட்டைகளால், அதனால் ஏற்படும் பொறாமையால் இந்தக் கேள்வியை முன்வைத்தாலும் ஒருகட்டத்தில் அவரது நலனுக்காகச் சொல்வது போன்றே இந்தக் கேள்வி பரிணமித்துவிட்டது. அதனால் இதற்குப் பதில் தேடும் முயற்சியாக ஆர்யாவுடன், தமிழகத்தில் களமிறங்கியிருக்கிறது ‘கலர்ஸ் தமிழ்’(Colors Tamil) சேனல்.
சில வாரங்களுக்கு முன்பு, நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் அக்கவுன்ட்டில் ‘என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள்’ என்று வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அந்த எண்ணுக்கு உலகம் முழுவதிலுமிருந்து எழுபதாயிரம் பெண்கள் போன் செய்திருக்கிறார்கள். அப்படிக் கிடைத்த பெண்களின் எண்ணுக்கு, அ...









