வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

நடிகைகள்

கொரானா குவாரண்டைன் நேரத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்த அஞ்சலி!

கொரானா குவாரண்டைன் நேரத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்த அஞ்சலி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    கொரானா குவாரண்ட்டைன் நேரத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்த அஞ்சலி! கொரானா பொது முடக்க காலத்தில் நடிகை அஞ்சலி இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் வீடியோ காலில் ஒரு காட்சிக்கு டப்பிங் பேசியுள்ளார். டப்பிங் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் அஞ்சலி வெளியிட்டதைத் தொடர்ந்து அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கொரானா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அத்தியாவசிய பணிகளைத் தவிர சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன. 5-ம் கட்ட பொது முடக்க அறிவிப்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிபந்தனைகள் கட்டுப்பாடுகளுடன் டிவி சீரியல் படப்பிடிப்புகள், சினிமா போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது அனுஷ்கா ஷெட்டி, மாதவன் ஆகியோருடன் இணைந்து நிசப்தம் என்ற படத்தில் அஞ்சலி நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஞ்...
மீண்டும் குஷ்பு வாய்க் கொழுப்பு பேச்சு!

மீண்டும் குஷ்பு வாய்க் கொழுப்பு பேச்சு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    மீண்டும் குஷ்பு வாய்க் கொழுப்பு பேச்சு! தமிழ் பெண்களுக்கு கற்பு என்பதே இல்லை என்பதை போன்ற அபத்தமான கருத்தை சொல்லி தமிழகத்தில் பல மாவட்டங்களில் சுமார் 29 வழக்குகளுக்கு மேல் சிக்கியவர் குஷ்பு. இந்த வழக்குகளுக்கு பயந்து திமுகவில் ஐக்கியமானார். அங்கேயும் ரொம்ப நாள் நீடிக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார். தான் ஒரு பிரபலமான நடிகை தான் பேசும் பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிந்தே கொஞ்சம்... இல்லை இல்லை நிறையவே ஆணவத்தோடு பல கருத்துக்களை சொல்லி சர்ச்சையில் சிக்குவது குஷ்பு வழக்கம். அடிக்கடி பத்திரிகையாளகளிடம் சிக்கிக் கொள்வார். இப்போது கொரானா காலம். திரையுலகம் முழுதும் முடங்கி இருந்தது. பல முறை நடையாக நடந்து டிவி சீரியல் ஷூட்டிங் நடத்த அனுமதி வாங்கினார்கள். அதிலும் பல கட்டுப்பாடுகளுடன் அந்த அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிவி சீரியல் ஷூட...
சீன மொழி பேசப் போகும் தனுஷின் அசுரன்!

சீன மொழி பேசப் போகும் தனுஷின் அசுரன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    சீன மொழி பேசப் போகும் தனுஷின் அசுரன்! பிரமாண்டமான தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடி நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்து மெகா ஹிட் அடித்த படம் அசுரன். தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கல்வி எத்தனை முக்கியம் என்பதை விளக்கும் விதமாகவும், ஆதீக்க சமூகத்தின் அடக்குமுறையை அப்பட்டமாக காட்டியது. தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற பெயர் அசுரனுக்கு கிடைத்தது. இந்த படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அதில் வெங்கடேஷ், பிரியாமணி நடிக்கின்றனர். கன்னட மொழியிலும் அசுரன் படத்தை தயாரிக்க உள்ளனர். சிவாராஜ் குமார் நடிக்க உள்ளார். இந்த சூழலில் அசுரன் சீனாவிலும்...
55 கோடிக்கு டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டதா “தலைவி” !?

55 கோடிக்கு டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டதா “தலைவி” !?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
    55 கோடிக்கு டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டதா "தலைவி" ! கொரானா பரவல் பரபரப்பிலும் முன்னாள் முதல்வர் ஜெ., தொடர்பான செய்திகள் எது வந்தாலும் பெரும் வைரல் ஆகி வரும் நேரம் இது. காரணம் அவருக்கு சொந்தமான சொத்துக்களை யார் உரிமை கொள்வது என்ற வழக்கின் தீர்ப்பு வேறு வந்துள்ளது. இந்த நேரத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரமாண்டமான பொருள் செலவில் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமத்தை அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆ...
சின்னத்திரை ஷூட்டிங் நடத்த 60 பேருக்கு அனுமதி – முதல்வர் உத்தரவு

சின்னத்திரை ஷூட்டிங் நடத்த 60 பேருக்கு அனுமதி – முதல்வர் உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
    சின்னத்திரை ஷூட்டிங் நடத்த 60 பேருக்கு அனுமதி - முதல்வர் உத்தரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை துவங்குவதற்கு 21.05.2020 அன்று அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. அனுமதி அளிக்கப்பட்ட அதிகபட்ச 20 நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு படப்பிடிப்பை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும், இதனை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கை குறித்து செய்தித்துறை அமைச்...
படம் அல்ல பாடம் – பொன்மகள் வந்தாள் கோடங்கி விமர்சனம்

படம் அல்ல பாடம் – பொன்மகள் வந்தாள் கோடங்கி விமர்சனம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    தாமதமாக வரும் நீதியும் அநீதிதான் என்று ஒற்றை வரியை மிகுந்த வலியோடு உணர்வு ரீதியாக சொல்லி இருக்கிற படம் தான் ஜோதிகா நடிப்பில் டிஜிட்டலில் வெளியான பொன்மகள் வந்தாள். இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டியில் திடீர் திடீரென பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்கள். அப்படி ஒரு குழந்தையை கடத்த முயன்ற பெண்ணை இருவர் தடுக்க வருகிறார்கள். அவர்களை அந்த பெண் சுட்டுக்கொலை செய்கிறார். அந்த கொலையாளியை பிடிக்கும் போது போலீசார் அந்த பெண்ணை என்கவுண்டர் செய்கிறார்கள். அதோடு அந்த வழக்கு முடிக்கப்படுகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட்ட அந்த என்கவுண்டர் வழக்கை மீண்டும் தூசி தட்டி எடுக்கிறார் வக்கீல் வெண்பாவான ஜோதிகா. அவருக்கு உதவியாக பாக்யராஜ். அதில் அவர் வெற்றி பெற்றாரா...? என்கவுண்டர் செய்யப்பட்ட பெண் யார்? அந்த பெண்ணால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆட்கள் யார்? பாக்யராஜுக்கு வெண்பா யார்...
2 கோடி பேர் பார்த்த ஜோதிகாவின்  பொன்மகள் வந்தாள் டிரைலர்!

2 கோடி பேர் பார்த்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள்
      *அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.* ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் 'பொன்மகள் வந்தாள்' தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது. இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது. தமிழகம் ம...
ஜெ., வீடு அரசின் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம் ஆகிறதா?!

ஜெ., வீடு அரசின் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம் ஆகிறதா?!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
    ஜெ., வீட்டை ஏன் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லம் ஆக்கக்கூடாது? - யோசனை சொன்ன கோர்ட் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி என்பவர் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்களான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். ஐகோர்ட்டில் அவர்கள் இருவரும் நேரில் ஆஜராகி, ஜெயலலிதாவின் வாரிசுகள் தாங்கள் என்றும் தங்களை சட்டப்பூர்வமான வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்றும் தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, ஜெயலலிதாவின் சொத்துக்க...
ராம்கோபால் வர்மாவின் ஹாட் திகில் கிளைமாக்ஸ் படம் மே29ல் ரிலீசாம்!

ராம்கோபால் வர்மாவின் ஹாட் திகில் கிளைமாக்ஸ் படம் மே29ல் ரிலீசாம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, உலக செய்திகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
    ராம்கோபால் வர்மாவின் ஹாட் திகில் கிளைமாக்ஸ் படம் மே29ல் ரிலீசாம்! பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மல்கோவா நடித்துள்ள படம் ’கிளைமாக்ஸ்’. சமீபத்தில் ’கிளைமாக்ஸ்’ படத்தின் டீஸர் வெளியானது. மியாவின் முழுக்க முழுக்க கவர்ச்சி காட்சிகள் அடங்கிய இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில்  ’கிளைமாக்ஸ்’ படத்தின் டிரைலரை ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 2 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் முழுக்க முழுக்க ஹாட்டான காட்சிகளும், சில திகில் காட்சிகள் நிறைந்து உள்ளது. ஊரடங்கு முடிந்தவுடன் இப் படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்த ராம் கோபால் வர்மா, தற்போது தன் முடிவை மாற்றி இருக்கிறார். கொரோனாவால் என் படத்தை நிறுத்த முடியாது என்று கூறி, வரும் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு புதிய ஆப் மூலம் ப...
அமிதாப், ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் உட்பட 7 பிரபலங்களின் 7 படங்கள் டிஜிட்டலில் மே மாதம் ரிலீஸ்

அமிதாப், ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் உட்பட 7 பிரபலங்களின் 7 படங்கள் டிஜிட்டலில் மே மாதம் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில்  நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள  "பொன்மகள் வந்தாள்" படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஐந்து இயக்குநர்கள் நடித்துள்ளனர். சுப்பு பஞ்சுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஐந்து இயக்குநர்கள் நடித்திருப்பதாலும் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் ஜோதிகா கூட்டணி மீண்டும்  இணைந்திருப்பதாலும் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது பொன்மகள் வந்தாள். இணையவாசிகள்,  இல்லப் பெண்மணிகள் உள்பட அனைத்து தரப்பினராலும் ரசிக்கக் கூடிய வகையில் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ஜே...