நடிகைகள்
நடிகையாக இருந்து இயக்குனர் அவதாரம் எடுத்த அக்ஷயா..!
AB கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பாலச்சந்தர்.T தயாரித்திருக்கும் படம் “ யாளி “
இந்த படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடித்து இயக்கியிருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குனரும், நாயகியுமான அக்ஷயா கூறியதாவது..
பெண் இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போது நல்ல வரவேற்பு இருக்கும் அந்த வரிசையில் நான் இணைந்துள்ளேன். இது ஒரு ரொமான்டிக், திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம். மும்பை பின்னணியில் நடக்கும் கதை.
முக்கியமான மூன்று கதாபாத்திரங்களை சுற்றி திரைக்கதை நகரும். நாயகி ஜனனி ( அக்ஷயா ),நாயகன்(தமன் )இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு தொடர்பு இல்லாத பாலா ( அர்ஜுன் ) என்ற கதாபாத்திரம் ஜனனியை பின்தொடர்கிறார். யார் அவர் எதற்கா...
ரெஜினாவுக்கு MR.சந்திரமெளலி தான் முதல் முறையாம்..!
திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - ரெஜினா கசாண்ட்ரா இணைந்து நடித்துள்ள படம் `மிஸ்டர்.சந்திரமௌலி'. கார்த்திக்கும், கவுதம் கார்த்திக்கும் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
வரலட்சுமி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன், விஜய் சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கவுதம் கார்த்திக் இந்த படத்தில் பாக்ஸராக நடித்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், நடிகை ரெஜினா அவரது காட்சிகளுக்கு டப்பிங் பேசி முடித்துள்ளார். ரெஜினா டப்பிங் பேசிய முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது...
ஸ்ருதியின் படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்த சரிகா
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர்களின் உலகத்தைப் பற்றிய இந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் பற்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறாராம் இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர். இதன் படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அங்கு ஸ்ருதிஹாசனின் அம்மாவும், நடிகையுமான சரிகா வருகை தந்து, மகளின் நடிப்பை பார்வையிட்டிருக்கிறார்.
இதைப் பற்றி படக்குழுவினர்களிடம் விசாரித்தபோது, ‘‘மகேஷ் மஞ்சரேக்கர் போன்ற திறமையான கதை சொல்லிகளின் படைப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்புக்கொண்டதை கேள்விப்பட்ட சரிகா உண்மையிலேயே சந்தோஷமடைந்தார். இயக்குநரின் வழிகாட்டலை ஸ்ருதி பின்பற்றினால் அவரின் திறமை மேலும் பளிச்சிடும் என்றார். அத்துடன் ஸ்ருதியை இது போன்ற தேசிய விருது பெற்...
கதாநாயகி ஆக நீச்சல் உடையில் வாய்ப்பு தேடும் டாப்சி தங்கை..!
ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் பட உலகில் பிரபலமானவர் டாப்சி. வந்தான் வென்றான், காஞ்சனா-2, வைராஜா வை படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு இந்தி திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். பிங்க், நாம் சபானா இந்தி படங்கள் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டும் பெற்றுள்ளார்.
டாப்சிக்கு ஷாகன் பன்னு என்ற தங்கை இருக்கிறார். இவர் 2016-ல் நடந்த இந்திய அழகி போட்டியில் பங்கேற்றவர். ஷாகன் பன்னுவும் நடிக்க வருகிறார். இதற்காக நடிப்பு, நடனங்களை கற்கிறார். தங்கைக்காக டாப்சி கதை கேட்டு வருவதாகவும் விரைவில் புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
சினிமா வாய்ப்பு பிடிப்பதற்காக ஷாகன் பன்னு நீச்சல் உடையில் இருப்பது போன்ற தனது கவர்ச்சி படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த படம் வைரலாகி வருகிறது....
“சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்தது பெருமை” -, கீர்த்தி சுரேஷ்
சாவித்திரியின் வாழ்க்கை, தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் சினிமா படமாக தயாராகி உள்ளது. இதில் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேசும், ஜெமினிகணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். சமந்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது.
விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது:-
“பெண் என்பவள் பலம் பொருந்தியவள் என்பதற்கும், நினைத்ததை சாதித்து காட்டுவாள் என்பதற்கும் உதாரணமாக வாழ்ந்தவர் நடிகை சாவித்திரி. அவரது கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா? என்று தயங்கினேன். இது எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்று பலரும் உற்சாகம் அளித்ததால் ஒப்புக்கொண்டேன்.
சாவித்திரி சம்பந்தமான புத்தகங்களை படித்தும், அவரது மகள் சாமுண்டீஸ்வரியிடம் விவரங்கள் சேகரித்தும் பல விஷயங்கள...
“தலைகீழாக நிற்கும் யோகாசனம் உடலுக்கு வலிமை தரும்” -நடிகை அமலாபால்
தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், ரட்சகன் படங்களிலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடிக்கும் அமலாபால் சமீப காலமாக யோகாசன பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விசேஷ பயிற்சியாளரை வைத்து யோகாசனம் கற்கிறார். ஒரு மரத்தின் அருகில் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்யும் படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அமலாபால் கூறியிருப்பதாவது:-
“கஷ்டமான வேலைகளை செய்யும்போது தலைகீழாக நின்றாலும் நடக்காது என்று சொல்ல கேட்டு இருக்கிறோம். தலைகீழாக நிற்பது உடலுக்கு எவ்வளவு முக்கியமானது, பயன் அளிக்க கூடியது என்பதை இப்போது உணர்ந்து இருக்கிறேன். யோகாவில் தலைகீழாக நிற்கும் சிரசாசனம் போடுவது மிகவும் கஷ்டமானது.
எல்லோராலும் எளிதாக அதை செய்ய முடியாது. கடும் பயிற்சிகள் மூலம் மட்டுமே செய்ய முடியும். இந்த ஆசனத்தை நான் ரொம்ப நாட்களாக கற்றேன். இதற்காக பயிற்சியாளர் வைத்து இருந்தேன். முதலில் சுவரை தாங்கலாக வைத்து தலைகீழாக நின்...
கலிபோர்னியா இசைத் திருவிழாவில் நயன்தார- விக்னேஷ் சிவன் செல்பி
நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன்பு ரொம்பவே யோசிக்கிறார். ஒரு பிரபல கதாநாயகன் அளவுக்கு ‘மார்க்கெட்’ உருவாகி விட்டதால், இந்த எச்சரிக்கை. தென்னிந்திய திரையுலகின் முதன்மை கதாநாயகி என்ற அந்தஸ்துடன் இருக்கும் அவர், அந்த அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறார். வருகிற பட வாய்ப்புகளை எல்லாம் அவர் ஏற்பதில்லை. தனக்கு பொருந்துகிற கதைகளையே தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
அவர் இப்படி கதைகளை தேர்வு செய்து நடிப்பதால், “நயன்தாரா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்” என்று செய்தி பரவுகிறது. அதை நிரூபிப்பது போலவே நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவருமே தங்கள் காதலை ஒவ்வொரு மேடையிலும் உறுதி செய்து வருகிறார்கள். ஒவ்வொரு மேடையிலும் ஒருவரையொருவர் புகழ்ந்து வருகிறார்கள். வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றிய படங்களை சமூகவலை தளங்களில் பதிந்து வருகிறார்கள்
நயன்தாராவின் ஒரே பயம், திருமணம் செய்து...
போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா..!
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது “பொட்டு“ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “கா“ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். உலக மக்களுக்கான படம் இது. இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளதால் ‘கா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.
மு...
பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு, அக்ஷய்யுடன் திருமணம் முடிந்தது
நட்சத்திர தம்பதிகளான பார்த்திபன் - சீதா தம்பதிகளின் மகள் கீர்த்தனாவுக்கும், பிரபல தேசிய விருது படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய்க்கும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து திருமணம் நடந்து முடிந்தது.
இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
கீர்த்தனா, மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்றவர். தற்போது மணிரத்னம் இயக்கும் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் புதிய படத்தை இயக்க இருக்கிறார்.
இவருக்கும் பிரபல சினிமா எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்ஷய்க்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலைய...

