வெள்ளிக்கிழமை, நவம்பர் 20
Shadow

நடிகைகள்

திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நெகிழ்ந்த விக்னேஷ் சிவன்!

திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நெகிழ்ந்த விக்னேஷ் சிவன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக தொடங்கியது. பின்னர் காலை 10.25 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார். இவர்களது திருமணத்தில் முன்ன...
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்.. நேரில் வாழ்த்திய திரைப்பிரபலங்கள்!

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்.. நேரில் வாழ்த்திய திரைப்பிரபலங்கள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி திரையுலகில் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நயன்தாரா படிப்படியாக நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றார். அதே நேரத்தில் விக்னேஷ் சிவன் உதவி இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை தொடங்கியிருந்தார். விக்னேஷ் சிவன் மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் ஹெச்.ஆர்.செக் பள்ளியில் படித்தார். மேலும் அவரது பள்ளியில் நடிகர் சிம்புவின் ஜூனியராக இருந்தார். இந்த அறிமுகம் தான் இவருக்கு முதல் படமான போடா போடியை உருவாக்க உதவியது. சிம்புவின் நட்பால் போடா போடி மூலம் இயக்குனராக அறிமுகமானார். இயக்குனராக நன்கு அறியப்பட்ட விக்னேஷ் எழுத்தாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. ...
முப்பது மொழிகளில் வெளியாகும் தமிழ் வலைதள தொடர் ‘ சுழல் – தி வோர்டெக்ஸ்’

முப்பது மொழிகளில் வெளியாகும் தமிழ் வலைதள தொடர் ‘ சுழல் – தி வோர்டெக்ஸ்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
*முப்பது மொழிகளில் வெளியாகும் தமிழ் வலைதள தொடர் ' சுழல் - தி வோர்டெக்ஸ்'.* *16 ஆண்டுகளுக்கு பிறகு 'சுழல் - தி வோர்டெக்ஸ்' மூலம் மீண்டும் நடிக்கும் ஸ்ரேயா ரெட்டி* *இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்' எனும் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 ஆம் தேதி முதல் வெளியாகும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியானது.* 'விக்ரம் வேதா' புகழ் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி அவர்களின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ' சுழல்- தி வோர்டெக்ஸ்'. இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வலைதள தொடரில் நடிகர்கள் ஆர். பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், நடிகைகள் ஐஸ்...
இயக்குனர் கே.பாக்யராஜ் கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்த “சூரகன்”

இயக்குனர் கே.பாக்யராஜ் கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்த “சூரகன்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சதீஷ் G.குமார் இயக்கும் “சூரகன்” 3rd Eye Cine Creations சார்பாக V.கார்த்திகேயன் பிரம்மாண்டமாக தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் “சூரகன்” அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் G.குமார் இப்படத்தை இயக்குகிறார். மேலும் ஒளிப்பதிவு இயக்கத்தையும் மேற்கொள்கிறார். க்ரைம் திரில்லராக உருவாகும் “சூரகன்” படத்தில் கதையின் நாயகனாக V.கார்த்திகேயன் நடிக்க கதாநாயகியாக சுபிக்‌ஷா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாண்டியராஜன், வின்சண்ட் அசோகன், நிழல்கள் ரவி நடிக்க, உடன் ரேஷ்மா பசுபுலெடி, வினோதினி, சுரேஷ் மேனன், K.S.G. வெங்கடேஷ், சாய் தீனா, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இன்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. இப்படத்தின் படபிடிப்பை இயக்குனர் கே.பாக்யராஜ் கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்தார்.  ...
சூழல் வெப் தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூழல் வெப் தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள வெப்தொடரின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில்  ‘ஓரம் போ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி. தொடர்ந்து, ‘வா குவாட்டர் கட்டிங்', ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களை இயக்கியுள்ளனர். ‘விக்ரம் வேதா’ ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இவர்கள் திரைக்கதை எழுதியுள்ள வெப் தொடர் ‘சூழல்’. இன்வெஸ்டிகேசன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த வெப்தொடரில் பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த தொடரை பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கியுள்ளனர்....
அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ‘செம்பி’ படத்தின் டிரெய்லர்!

அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ‘செம்பி’ படத்தின் டிரெய்லர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
2010-ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன். கும்கி, கயல், தொடரி, போன்ற பல ஹிட் படங்கள் கொடுத்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் இயக்கும் படம் ‘செம்பி’. கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா போன்றோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது.  இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். சமீபத்தில் ‘செம்பி’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது, இதன் டிரெய்லரை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டார். வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் டிரெய்லர் மக்களிடையே படத்தின் ரிலீஸ் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்திய...
கீர்த்தி சுரேஷ் அறிக்கை!

கீர்த்தி சுரேஷ் அறிக்கை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பின்னர் 2018-ல் தெலுங்கில் வெளியான ‘மகாநதி’ படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘சாணிக் காயிதம்’ மற்றும் ‘சர்காரு வாரி பாட்டா’ படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, கீர்த்தி சுரேஷ் நடிப்பை பலரும் பாராட்டினர். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் நீண்ட அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு நடிகராக இருப்பது என்பது கடினமான பயணம், நாங்கள் முழுவதும் உயர்வையும் தாழ்வையும் காண்கிறோம். அதுவே பெரும்பாலும் நமது இலக்கைத் தீர்மானிக்கிறது. சமீபகாலம் எனக்கு ஒரு சோதனையான காலகட்டமாகும், மேலும் எனது சிறப்பை உலகிற்கு க...
14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக்குக் கிடைத்த பதில்.. மாயோன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக்குக் கிடைத்த பதில்.. மாயோன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  "கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும்" 14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக்குக் கிடைத்த பதில்.. மாயோன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு 14 வருடங்களுக்கு பிறகு கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் பேசிய வசனத்திற்கு பதில் கிடைத்திருப்பதாக மாயோன் படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் சிபி ராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாயோன். படத்தை டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. படத்தின் டீசர் மிகவும் வித்தியாசமான முறையில் பார்வையற்றவர்களுக்கு பிரத்தியேகமான வடிவமைப்பில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்த ...

பரத்-வாணி போஜன் நடிக்கும் “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *Axess Film Factory G டில்லி பாபு வழங்கும்* *பரத்-வாணி போஜன் நடிக்கும் “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் !* Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். தமிழ் சினிமாவில் நல்ல தரமான உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களைத் தயாரிக்கும் மிகச்சிலரில் ஒருவர் Axess Film Factory தயாரிப்பாளர் G டில்லி பாபு. அவரது தயாரிப்பில் வெளியான ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் என பல திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் படங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது தன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ‘மிரள்’ என்ற பெயரில் அடுத்த ...
மர்மமான விசாரணை திகில் திரைப்படமாக உருவாகும் 13

மர்மமான விசாரணை திகில் திரைப்படமாக உருவாகும் 13

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
Madras Studios நிறுவனம், Anshu Prabhakar Films உடன் இணைந்து தயாரிக்க, S நந்த கோபால் வழங்கும், GV பிரகாஷ் குமார் - கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் “13” திரைப்பட அறிவிப்பு ! ஜி.வி.பிரகாஷ் குமார் & கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படத்தில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த வெற்றி கூட்டணி இப்போது '13' என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள், இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் S நந்த கோபால், Madras Studios நிறுவனம் சார்பில், Anshu Prabhakar Films உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். ஒரு மர்மமான விசாரணை திகில் திரைப்படமாக, உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் K விவேக் இயக்குகிறார். நடிகர்கள் குழுவில் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா,ஆதித்யா கதிர் உடன் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். சித்து ...