சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படமான ‘கபடதாரி’
சிபிராஜ் நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லர் படத்திற்கு 'கபடதாரி' என்று பெயர் அறிவிப்பு
கிரியேட்டிவ் என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வழங்கும் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நாயகனாக நடிக்கும் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லராக உருவாகும் படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்தது. தற்போது அப்படத்திற்கு 'கபடதாரி' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‘கபடதாரி’ என்றால் பாசாங்குக்காரன்/வேஷக்காரன் என்று பொருள். சிபிராஜுடன் நாசரும் நடிப்பதாக முடிவாகிவிட்ட நிலையில் சமீபத்தில் சிபிராஜ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா ஒப்பந்தமாகியிருந்தார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் சில முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.
சிபிராஜ் இதுவரை நடித்த ஏற்று நடித்த பாத்திரங்களை விட இந்த படத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் என்கிறார...









