‘டியர் ரதி’ பட விமர்சனம் 3/5
‘டியர் ரதி’ திரைப்பட விமர்சனம்
நாயகன் சரவண விக்ரமிற்கு சிறு வயதில் இருந்தே பெண்களிடம் பேசுவது என்றால் ஒருவித பயம். அதனால் அவருக்கு கைகூடிய இரண்டு காதல் கைவிட்டு போய் விடுகிறது. பெண்களிடம் அவருக்கு இருக்கும் பயத்தை போக்குவதற்காக அவரது நண்பர் பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு அவரை அழைத்து செல்கிறார். அங்கு பாலியல் தொழிலாளியான நாயகி ஹஸ்லி அமானை சந்திக்கும் நாயகனுக்கு அவர் மீது ஒருவித ஈர்ப்பு வருகிறது. அதனால், அவருடன் பழக ஆசைப்படுபவர், அவருடன் ஒருநாள் முழுவதும் செலவிட விரும்புகிறார். அதற்கு ஹஸ்லி அமானும் சம்மதிக்க, இருவரும் சேர்ந்து தங்களது ஒருநாள் பயணத்தை தொடங்குகிறார்கள். மறுபக்கம் ஹஸ்லி அமானை பெரும் கூட்டம் ஒன்று தேடி வருகிறது.
நாயகன் உடனான ஒருநாள் பயணத்தையும், பெரும் கூட்டத்தின் தேடுதல் பயணத்தையும் எதிர்கொள்ளும் நாயகி ஹஸ்லி அமான் யார் ?, இவற்றை அவர் எப்படி எதிர்...









