நடிகை காஜல் தனது கணவருடன் இணைந்து தொடங்கிய புதிய பிசினஸ்!
தமிழில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
அதனை தொடர்ந்து காஜல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.மேலும் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ஆம் தேதி கெளதம் கிட்சிலு என்பவருடன் எளிமையாக திருமணம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தேனிலவுக்குச் சென்ற காஜல் தற்போது மீண்டும் படப்பிடிப்பில் இ...








