சனிக்கிழமை, நவம்பர் 21
Shadow

நடிகைகள்

வாரிசு நடிகருடன் நடிகை அனு இம்மானுவேல் காதல்!

வாரிசு நடிகருடன் நடிகை அனு இம்மானுவேல் காதல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
வாரிசு நடிகருடன் நடிகை அனு இம்மானுவேல் காதல்! நடிகை அனு இம்மானுவேல், தமிழில் விஷாலுடன் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக சர்வானந்த், சித்தார்த் நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகும் மகாசமுத்திரம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை அனு இம்மானுவேலும், தெலுங்கு நடிகர் அல்லு சிரிசும் ரகசியமாக காதலித்து வருவது அம்பலமாகி உள்ளது. சமீபத்தில் அனு இம்மானுவேல் பிறந்தநாள் கொண்டாடினார். அப்போது அவரை வாழ்த்தி அல்லு சிரிஷ் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் இருவரும் நெருக்கமாக உள்ளனர். அதில் அனுவை சைக்கோ என்றும் செல்லமாக அழைத்து உள்ளார் அல்லு சிரிஷ். இந்த வீடியோ அவர்கள் காதலை உறுதிப்படுத்தி இருப்பதாக தெலுங்கு பட உலகினர் பேசுகிறார்கள். நடிகர் அல்லு சிரிஷ் தெலுங்கில் இளம் கதாநாயகனாக வளர்ந்து வருகிறார். தமி...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா மகள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா மகள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா மகள்! தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகென் ராவும், 4-வது சீசனில் நடிகர் ஆரியும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழில் முதல் மூன்று சீசன்களும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்பட்ட நிலையில், 4-வது சீசன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது. இந்நிலையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனை ஜூன் மாதம் 3 வாரத்திலிருந்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இதனிடையே இந்தமுறை கலந்து கொள்ள இருப்பதாக ஒரு சில திரைபிரபலங்களின் பெயரும் அடிபட தொடங்கியுள்ளது. ஏற்கனவே நடிகர்கள் ராதாரவி, மன்...
நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா!

நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா! இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28).  இவர் மும்பையில், சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஆலியா, தனது இன்ஸ்டாகிராமில் நள்ளிரவில் வெளியிட்ட செய்தியில், அனைவருக்கும் வணக்கம். எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.  வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவேன். என்னுடைய மருத்துவர்கள் அறிவுரையின்படி அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும், அவர் தன்னுடைய பதிவில், உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி என ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்....
வைரலாகும் மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி’ படத்தின் டிரெய்லர்!

வைரலாகும் மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி’ படத்தின் டிரெய்லர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
வைரலாகும் மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி’ படத்தின் டிரெய்லர்! இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்துள்ளார். ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை எழுதி உள்ளார் மாதவன். பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு பிறகு மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜெகன் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளன...
வாழ்க்கையை நினைத்தால் சோகமும் பயமும் வருகிறது – ராதிகா ஆப்தே!

வாழ்க்கையை நினைத்தால் சோகமும் பயமும் வருகிறது – ராதிகா ஆப்தே!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
வாழ்க்கையை நினைத்தால் சோகமும் பயமும் வருகிறது - ராதிகா ஆப்தே! ராதிகா ஆப்தே நடிப்பில் ‘தாண்டவ்’ என்ற வெப் சீரிஸ் கடந்த ஜனவரி மாதம் ஒடிடி தளத்தில் வெளியானது. இந்துக் கடவுள்களை தவறாக சித்தரித்து ஒளிபரப்பான இந்த தொடரை தடை செய்யவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த விவகாரம் பெரிதாக வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வெப் சீரிசை உடனடியாக நீக்க வலியுறுத்தி நடிகை கங்கணா உள்ளிட்ட பல பிரபலங்கள் போர்கொடி உயர்த்தினர். இதை பார்த்த மத்திய அரசு, ஓடிடி தளங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் சட்ட விதிமுறைகளை வகுத்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளதாவது, ’ஒரு விஷயத்திற்கு எதிராக மாற்று கருத்து உருவாகும்போது சுதந்திரத்துக்கும், சகிப்புத் தன்மைக்கும் இடம் கொடுக்க வேண்டும். நமது வாழ்க்கை எங்கே சென்று கொண...
நயன்தாரா பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராதாரவி!

நயன்தாரா பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராதாரவி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
நயன்தாரா பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராதாரவி! நடிகரும், அரசியல் பிரமுகருமான ராதாரவி இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த விழாவில், நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என பேசினார். இது மிகவும் சர்ச்சையானது. இந்த சர்ச்சை எதிரொலியாக திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது பிஜேபி கட்சியில் இணைந்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது, நயன்தாரா பற்றி நான் பேசியதால் என்னை திமுக கட்சி தற்காலிகமாக நீக்கியது. நான் முழுவதுமாக கட்சியை விட்டு வெளியேறினேன். நயன்தாரா யாரு? திமுக கட்சியின்...
சானியா மிர்சா பயோபிக்கில் நடிக்கும் தனுஷ் பட நடிகை!

சானியா மிர்சா பயோபிக்கில் நடிக்கும் தனுஷ் பட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, sports, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சானியா மிர்சா பயோபிக்கில் நடிக்கும் தனுஷ் பட நடிகை! விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி தடகள வீரர் மில்கா சிங், பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம், கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி ஆகியோரது பயோபிக் வெளியாகி வசூலில் சாதனை படைத்தன. தற்போது கபில்தேவ், மிதாலி ராஜ், சாய்னா நேவல், ஜூலன் கோஸ்வாமி, கர்ணம் மல்லேஸ்வரி போன்ற பிரபலங்களின் படங்கள் தயாராகி வருகின்றன. அதேபோல் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் பயோபிக்கும் உருவாக உள்ளது. ரோனி ஸ்குருவாலா தயாரிக்கும், இப்படத்தில் சானியா மிர்சா வேடத்தில் நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், சானியா மிர்சா வேடத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை டாப்ஸி, தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ம...
நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர் – நெத்தியடி பதில் கொடுத்த பிரியாமணி!

நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர் – நெத்தியடி பதில் கொடுத்த பிரியாமணி!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர் - நெத்தியடி பதில் கொடுத்த பிரியாமணி! தமிழில் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பிரியாமணி பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். தமிழில் ‘கொட்டேஷன் கேங்க்’ படத்திலும் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பிரியாமணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார். அதற்கு நிறைய வரவேற்பும், விமர்சனங்களும் கிளம்பின. இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், நிர்வாண புகைப்படங்களை வெளியிடுங்கள் என்றார். இதனால் கோபமான பிரியாமணி முதலில் உனது தாய், சகோதரியிடம் இதை கேள், அதன்பிறகு நானும் பதிவிடுகிறேன் என்று சாடினார். பிரியாமணியின் பதில் வைரலாக...
தலைவி படத்தின் புதிய அப்டேட்!

தலைவி படத்தின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தலைவி படத்தின் புதிய அப்டேட்! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் கங்கனா பிறந்தநாளில் வெளியானது. இது ரசிகர்ளிடையே அதிக வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் மழை மழை என்னும் முதல் பாடலை ஏப்ரல் 2 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள். இந்த பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தலைவி படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது....
தளபதி 65 படத்தில் நடிக்கும் கவின்!

தளபதி 65 படத்தில் நடிக்கும் கவின்!

HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தளபதி 65 படத்தில் நடிக்கும் கவின்! சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். இதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார். கவின் நடிப்பில் தற்போது லிப்ட் என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கவின் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற தளபதி 65 படத்தின் பூஜையில் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டனர். அதில் கவினும் கலந்துகொண்டதால், அவர் இப்படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதுதவிர வி.டி.வி கணேஷும் இப்படத்தில் நடிக்க உள்ளாராம். தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல...