எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘றெக்கை முளைத்தேன்’ ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்!
*ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் பேனரில் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்' ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது*
*'சுந்தரபாண்டியன்', 'இது கதிர்வேலன் காதல்', 'சத்ரியன்', 'கொம்பு வெச்ச சிங்கம்டா' படங்கள் மற்றும் 'செங்களம்' இணையத் தொடருக்கு பிறகு எஸ் ஆர் பிரபாகரன் இயக்கும் முற்றிலும் புதிய ஜானர் 'றெக்கை முளைத்தேன்' படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்*
'சுந்தரபாண்டியன்' திரைப்படத்தில் கிராமத்து நட்பு, 'இது கதிர்வேலன் காதல்' படத்தில் நகைச்சுவை மற்றும் காதல், 'சத்ரியன்' படத்தில் ஆக்ஷன், 'கொம்பு வெச்ச சிங்கம்டா' படத்தில் கிராமத்து வீரம் மற்றும் 'செங்களம்' இணையத் தொடரில் அரசியல் ஆழம் எனப் பல்வேறு வகைப் படைப்புகளில் முத்திரை பதித்த இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன், 'றெக்கை முளைத்தேன்' படத்தின் மூலம் இன்னுமொரு புதிய...









