ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே
CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் 'கிங் - KING' திரைப்படத்தின் முதல் பாடல் 'தூ மில் ஜாயே - Tu Mil Jaaye'!
தனது பிறந்தநாளில் ஷாருக்கான், வரவிருக்கும் 'கிங் - KING' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தூ மில் ஜாயே - Tu Mil Jaaye' எனும் முதல் பாடலை வெளியிட்டிருக்கிறார். இந்தப் பாடலின் மூலம், ஒரு ராஜாவைப் போல் எப்படி நேசிக்க வேண்டும் என்பதை உலகிற்கு அவர் காட்டியிருக்கிறார். காதல் - அதிரடி - அவரது மிரட்டலான, திகிலூட்டும் பாணி ஆகியவை கலந்த இந்தப் பாடலில் தீபிகா படுகோனும் இடம் பிடித்துள்ளார். மேலும், இந்தப் பாடலில் அர்ஜித் சிங் (Arijit Singh) மற்றும் எட் ஷீரன் (Ed Sheeran) ஆகியோரின் உலகளாவிய இசைப் பங்களிப்பும் இடம்பெற்றுள்ளது.
ஷாருக்கானின் ரசிகர்களுக்கு இதைவிட ஆகச்சிறந்த பிறந்தநாள் பரிசு இருக்க முடியாது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் விரைவில் வெளியாகவுள்ள அதிரடித் திரைப்பட...









