நடிகை பிரியா வாரியர் மீது போலீசில் அடுத்தடுத்து புகார்..!
‘ஒரு அடார் லவ்' படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் தங்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாகப் படத்தின் இயக்குநர், நடிகை பிரியா வாரியர் மீது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு அடார் லவ் என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற ஒரே பாடல் மூலம் உலகப் புகழ் பெற்றவர் இளம் நடிகை பிரியா வாரியர். அந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவுகள், முக பாவனைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பட ரிலீசை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் நாளுக்கு நாள் பிரியா வாரியரின் புகழ் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதே சமயம் இந்தப் பாடல் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள ஒரு வரி மத உணர்வைப் புண்படுத்துவதாக உள்ளதாக ஐதராபாத் போலீச...









