நடிகர், நடிகைகளின் சம்பளத்தை உயர்த்தாமல் கட்டுப்படுத்த புதிய அமைப்பு..!
நடிகர் நடிகைகளின் சம்பளம் உயருவது குறையுமா?
தமிழ் சினிமாவில் புதிதாக உருவாகியிருக்கும் சங்கம்.
திரைப்படங்களின் கதையின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிகர் நடிகைகளை வழங்கி வந்த கேஸ்டிங் டைரக்டர்கள் எனப்படும் நடிப்பு இயக்குனர்கள், தென்னிந்தியாவில் ஒன்றிணைந்து 'தென்னிந்திய திரைப்பட நடிப்பு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கத்திணை' தங்களுக்கென உருவாக்கியுள்ளனர்.
மேலும் இச்சங்கத்தில் முன்னணி திரை நட்சத்திரங்களுக்கு மேலாளராக பணியாற்றுபவர்கள் இதில் ஒரு அங்கமாக உள்ளனர். இச்சங்கமானது வரும் காலங்களில் திரைத்துறையில் புதிதாய் வாய்ப்பு தேடுவோர் மற்றும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் ஆகியோருக்கு ஒரு நல்ல உறுதுணையாக அமையும் என தெரிவித்துள்ளனர்.
இதனை வழி நடத்த திரைத்துறையின் ஜாம்பவான்களான நடிகர் மற்றும் இயக்குனர் திரு கே.பாக்யராஜ் அவர்கள் கௌரவ வழிகாட்டியாகவும், கௌரவ ஆல...









