வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

நடிகைகள்

சமந்தாவின் “ஓ பேபி” விரைவில்…

சமந்தாவின் “ஓ பேபி” விரைவில்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சமந்தா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இது கொரியப் படம் ஒன்றின் அதிகாரபூர்வமான ரீமேக் எனத் தெரியவந்துள்ளது. தென் கொரியாவில் 2014ஆம் ஆண்டு வெளியான படம் மிஸ் கிரானி. வயதான பெண் எதிர்பாராதவிதமாக இளவயது தோற்றத்தை அடைவதை மையமாகக் கொண்டு உருவாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கை நந்தினி ரெட்டி ஓ பேபி என்ற பெயரில் இயக்குகிறார். இதில் சமந்தாவுடன் இணைந்து பழம்பெரும் நடிகை லட்சுமி நடிக்கிறார். சமந்தா ஸ்வாதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கு திரையுலகில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ், பியூப்பிள்’ஸ் மீடியா ஃபேக்டரி, குரு பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தை தயாரிக்கின்றன. போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா, “திரைப்பட தயாரிப்பில் 55 ஆண்...
யோகாவில் வில்லாக சாகசம் காட்டும் அமலாபால்..!

யோகாவில் வில்லாக சாகசம் காட்டும் அமலாபால்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சமூகவலைதளங்களில் கவர்ச்சி படங்களை அடிக்கடி வெளியிடும் அமலாபால் இந்த கட்டுக்கோப்பான உடலுக்கு காரணம் யோகா பயிற்சி என்று கூறியுள்ளார். அவ்வப்போது ஒரு சில யோகாசனங்கள் செய்வதை படமாக வெளியிட்டு வந்த அமலாபால் தற்போது தனது குருஜியுடன் யோகா செய்யும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். சூரிய நமஸ்காரம் செய்வது போல் போஸ் கொடுத்து இருக்கும் அமலா, ’இரண்டு கைகளையும் தலைக்குமேல் உயரே கூப்பி நமஸ்தே சொல்கிறேன்’ என பதிவிட்டு இருக்கிறார்.     https://www.instagram.com/p/BxomUSbAF0J/?igshid=zxamc33mln5j...
உடல்நல குறைவு காரணமாக மருத்துவனையில் நடிகை குஷ்பு அனுமதி

உடல்நல குறைவு காரணமாக மருத்துவனையில் நடிகை குஷ்பு அனுமதி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
  உடல்நல குறைவு காரணமாக மருத்துவனையில் நடிகை குஷ்பு அனுமதிக்கப்பட்டார். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், நேற்று மாலை நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளது திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீர் உடல் நலக்குறைவு காரணமாக குஷ்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.   https://twitter.com/khushsundar/status/1131262258321903616?s=19   இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தொடர்பான டிவி விவாதங்களில் தன்னால் கலந்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதற்கு வருந்துகிறேன், என்று குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....
திரிஷா நடித்த ‘ராங்கி’ அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில்…

திரிஷா நடித்த ‘ராங்கி’ அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  திரிஷா நடித்த 'ராங்கி’ அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில்... திரிஷா நடித்த சதுரங்க வேட்டை 2, கர்ஜனை என்ற இரண்டு படங்களும் ரிலீசுக்காகக் காத்திருக்கின்றன. மேலும் 1818, பரமபதம் என கைவசம் உள்ள படங்கள் வெவ்வேறு தயாரிப்பு நிலைகளில் இருக்கின்றன. இந்த நிலையில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் ஏ.ஆர்.முருகதாசின் கதை, வசனத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தில் திரிஷா தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ‘ராங்கி’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள்....
ஹீரோ ஆகும் துரியோதனன் சரித்திர படத்தில் திரவுபதி சினேகாவாம்…!

ஹீரோ ஆகும் துரியோதனன் சரித்திர படத்தில் திரவுபதி சினேகாவாம்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும் நடித்துள்ள குருஷேத்திரா என்ற கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மகாபாரத புராணத்தை அடிப்படையாக கொண்ட இந்த படம் 150 கோடியில் உருவான மெகா பட்ஜெட் படம் இது. துரியோதணனை கதாநாயகனாக காட்டும் இந்த படத்தில் தர்‌ஷன் அந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் கர்ணனாகவும், சினேகா திரவுபதியாகவும், வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், அம்பரீஷ் பீஷ்மராகவும், சோனு சூட் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர். நிகில் குமார், பி.ரவி ஷங்கர், ஹரிப்பிரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல கன்னட இயக்குனர் நாகன்னா இயக்கியிருக்கும் இந்த படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது....
ஆடை கழற்றி உள்ளாடை விளம்பரத்தில் நடித்த “தோனி” நாயகி..!

ஆடை கழற்றி உள்ளாடை விளம்பரத்தில் நடித்த “தோனி” நாயகி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். எல்லா ஹீரோயின்கள் போல இவரும் அடிக்கடி கவர்ச்சீ... படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்துவார். இப்போது ஒரு உள்ளாடை விளம்பரத்தில் திஷா பதானி நடித்திருக்கிறார். வழக்கமாக இது போன்ற உள்ளாடை விளம்பரங்களில் நடிக்கும் நடிகைகள் அந்த நிறுவன உள்ளாடை மட்டுமே அணிந்தபடி பலவிதமான போஸ்களில் போட்டோ எடுக்க மாடலாக நிற்பார்கள். இந்த திஷா பதானி அதிலும் வித்தியாசம் காட்டி இருக்கிறார். மேல் சட்டையை கழற்றி விட்டபடியும், கால் சட்டையை பாதி அதாங்க பேண்ட்டை அவிழ்த்தபடி உள்ளாடைகள் தெரிய செக்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். இதுதான் இப்போதைய இணைய வைரல் கதை...!...
காஜல் அகர்வால் “ச்சீய்” படம்…!

காஜல் அகர்வால் “ச்சீய்” படம்…!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  ஹீரோயின்கள் பட வாய்ப்புகள் இல்லாத போது கவர்ச்சிகரமான படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவார்கள். இப்போது அந்த வரிசையில் இவரும் சேர்ந்து விட்டார் போல... கையில் அதிகமாக படங்கள் இல்லாத காஜல் அகர்வால் கவர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். கண்ணைக் கவரும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முகம் சுளிக்கும் வகையில் படு கிளாமராக அந்த படம் அமைந்துள்ளது. காஜல் அகர்வால் இப்போது ஜெயம் ரவியின் கோமாளிப் படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் இப்போது எடுத்த படமும் ரொம்ப கோமாளித்தனமாக இருக்கிறது....
விமல் ஜோடியாக “சண்டைக்காரி” ஆக மாறிய ஸ்ரேயா..!

விமல் ஜோடியாக “சண்டைக்காரி” ஆக மாறிய ஸ்ரேயா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ரொம்ப நாளைக்கு பின் மீண்டும் கவர்ச்சி காட்டும் நாயகியாக களம் இறங்கி இருக்கிறார் ஸ்ரேயா. சமீபத்திய சர்ச்சை நாயகன் விமல் ஜோடியாக ஸ்ரேயா நடித்து வருகிறார். தி புரபோசல் என்கிற ஆங்கிலப் படத்தின் ரீமேக் படமாக உருவாகும் இந்த படத்துக்கு ‘சண்டைக்காரி’ என பேர் வைத்திருக்கிறார்கள். மோகினி படத்துக்கு பின் அமைதியாக இருந்த ஆர்.மாதேஷ் இயக்கத்தில் இந்த சண்டைக்காரி படத்தின் முதல் ,கட்டப்படப்பிடிப்பு லண்டனில் முடிந்து விட்டது. மோகினி படமும் பெரும்பாலும் லண்டனில் தான் நடந்தது. தி புரோபோசல் படத்தின் ரீமேக் ஏற்கனவே மலையாளத்தில் மை பாஸ் என்ற பெயரில் திலீப் நடிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது....
கேன்ஸ் பட விழாவில் காஞ்சீபுரம் பட்டு சேலை அணிந்த கங்கனா

கேன்ஸ் பட விழாவில் காஞ்சீபுரம் பட்டு சேலை அணிந்த கங்கனா

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
சர்வதேச அளவில் ஆஸ்கார், குளோப் திரைப்பட விருதுகளுக்கு அடுத்து கேன்ஸ் விருதுகள் உயர்வாக கருதப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான 75-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் தொடங்கி உள்ளது. வருகிற 25-ந்தேதி வரை இந்த விழா நடக்கிறது. போட்டியில் சர்வதேச அளவில் 21 படங்கள் பங்கேற்கின்றன. சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கேன்ஸ் பட விழாவில் அமெரிக்க இயக்குனர் ஜின் ஜார்முச் இயக்கிய ‘த டெட் டோன்ட் டை’, டாரண்டினோவின் ‘ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் ஹாலிவுட்’, முதன் முறையாக கருப்பின பெண் இயக்குனரான பிரான்சிஸ் மட்டி டியோப் இயக்கிய படம் ஆகியவற்றை திரையிடுவது முக்கியத்துவம் பெற்றுள்ளன. கேன்ஸ் விழாவில் விருது பெறும் பல படங்கள் ஆஸ்கார் விருதை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் நடிகைகள் ...