த்ரிஷாவின் வாய் பேச முடியாத மகளாக மாறிய நயன்தாராவின் வாயாடி மகள்..!
இமைக்க நொடிகள் படத்தில் நயன்தாரா நடிப்பைவிட மிக பரவலாக பாராட்டை பெற்றது நடிகர் கொட்டாச்சியின் மகள் மான்ஸ்வி.
நயன்தாரா மகளாக வாயாடி குழந்தையாக நடித்து மான்ஸ்வி அசத்தி இருந்தார்.
அதன் பின் பிசியான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த மான்ஸ்வி தேதி கிடைக்காமல் பல படங்கள் காத்திருந்தன.
சதுரங்க வேடை 2 படத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
இந்த நிலையில் திரிஷா நடித்து வரும் பரமபதம் விளையாட்டு படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருக்கிறார் மான்ஸ்வி.
இமைக்கா நொடியில் நயன்தாரா மகளாக வாயாடி குழந்தையாக நடித்த மான்ஸ்வி திரிஷா மகளாக நடிக்கும் பரமபதம் விளையாட்டு படத்தில் வாய் பேச முடியாத குழந்தையாக நடித்து அசத்தி இருக்கிறார்....









