காமெடியாக உருவாகும் “இராஜாவின் பார்வை இராணியின் பக்கம்“
CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
விகாஷ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் “ இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் “
இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சியில் நடித்துள்ளார். நாயகியாக அவந்திகா நடித்திருக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர் . மற்றும் மதுமிதா, கானாஉலகநாதன், சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு சந்தான கிருஷ்ணன். லியாண்டர் லீ மார்டின் இசையில் பாடல்கள்.
விகாஷ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் அழகுராஜ் படம் குறித்து கூறும் போது...
இது முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கி இருக்கிறோம். தன்னை ஏமாற்றிய காதலியை பழிவாங்க ஒரு பெரிய டானின் உதவியை நாடிச்செல்கிறார் நாயகன். அந்த டான் நாயகனை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொண்டார் என்பது க...









